- Home
- Astrology
- Jan 31 Thulam Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, பண விஷயத்தில் அசால்ட்டா இருந்தா பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.!
Jan 31 Thulam Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, பண விஷயத்தில் அசால்ட்டா இருந்தா பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.!
Jan 31 Thulam Rasi Palan : ஜனவரி 31, 2026 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:
இன்று பணிகளில் அதிக கவனம் தேவைப்படும் நாளாக இருக்கும். அவசரப்பட்டு முடிவெடுப்பதை தவிர்க்கவும். எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். நேர்மறையான அணுகுமுறை, தியானம், பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும். கால் வலி அல்லது மூட்டு வலி ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையைப் பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கையிருப்பு கரையக்கூடும். எதிர்பாராத சிறிய செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நிதி நிலைமையை சீராக வைத்திருக்க உதவும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறவுகளை பொறுத்தவரை சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதிக வேலைப்பளு காரணமாக ஏற்படும் கோபத்தை வீட்டில் காண்பிக்க நேரிடலாம். அலுவலகத்திலும் சக பணியாளர்களுடன் மோதல்கள் காணப்படும்.
பரிகாரங்கள்:
மன அமைதி கிடைப்பதற்கு மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி தாயாரை வழிபடுவது நல்லது. அருகில் உள்ள கோவிலில் தீபம் ஏற்றி வழிபட்டு ஏழை எளியவர்களுக்கு தயிர்சாதம் தானமாக வழங்குவது நன்மை தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

