- Home
- Astrology
- Shakun Shastra: சாலையில் இந்த 6 பொருட்களை கண்டால் தப்பி தவற கூட எடுத்து விடாதீர்கள்.! துரதிர்ஷ்டம் பிடிக்கும்.!
Shakun Shastra: சாலையில் இந்த 6 பொருட்களை கண்டால் தப்பி தவற கூட எடுத்து விடாதீர்கள்.! துரதிர்ஷ்டம் பிடிக்கும்.!
Which things should not be taken from the road: சகுன சாஸ்திரத்தின்படி சாலையில் இருக்கும் சில பொருட்களை நாம் எடுக்கக் கூடாது. அது எதிர்மறை ஆற்றல்களை நம்முடன் எடுத்து வருவதாக நம்பப்படுகிறது.

சாலையில் இருந்து எடுக்கக்கூடாத பொருட்கள்
சாலையில் கிடக்கும் பொருட்களை எடுப்பது அவற்றின் நேர்மறை ஆற்றல்கள் அல்லது எதிர்மறை ஆற்றல்களை நம்முடன் எடுத்து வருவதாக கருதப்படுகிறது. ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் சகுன சாஸ்திரங்களின்படியும் கீழ் கண்ட பொருட்களை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவை எதிர்மறை ஆற்றல்களை மட்டுமல்லாமல் துரதிஷ்டத்தையும் சுமந்து வரலாம் என்று நம்பப்படுகிறது. அத்தகைய பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாலையில் இருந்து எடுக்கக்கூடாத பொருட்கள்:
1.பணம்
சாலையில் கிடக்கும் பணத்தை எடுப்பது அந்த பணத்தை இழந்தவர்களின் துரதிஷ்டத்தையும், கர்மாவையும் இழுத்து வருவதாக நம்பப்படுகிறது. தவிர்க்க முடியாத நிலையில் அந்த பணத்தை எடுத்தால் கோவிலில் உண்டியலில் போட்டு விடுவது அல்லது இயலாதவர்களுக்கு கொடுத்து விடுவது எதிர்மறை ஆற்றலை நீக்க உதவும்.
2.கூர்மையானப் பொருட்கள்
கத்தி, கத்திரிக்கோல், ஆணி, ஊக்கு போன்ற கூர்மையான அல்லது இரும்பு பொருட்களை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இரும்புப் பொருட்கள் சனியின் காரகப் பொருள் என்பதால் இவற்றின் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் பரவக் கூடும் என்று நம்பப்படுகிறது.
3.பூஜைப் பொருட்கள்
சாலையில் கைவிடப்பட்ட குங்குமம், விபூதி, மஞ்சள், உடைந்து போன சாமி சிலைகள் அல்லது படங்கள் போன்றவற்றை தொடவோ, எடுத்து வரவோ கூடாது. இவற்றை நீர் நிலைகளில் அல்லது கோவில்களில் எடுத்துச் சென்று வைத்துவிடலாம்.
4.தனிப்பட்ட பொருட்கள்
தங்கம் உள்ளிட்ட நகைகள், உடைகள், கைக்குட்டை, தலைமுடி அல்லது பழைய செருப்புகள் போன்ற ஒருவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய பொருட்களை எடுக்கக்கூடாது. இது மாந்திரீக ரீதியான சடங்குகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
5.உணவுப் பொருட்கள்
சமைத்து சாலையில் வீசப்பட்ட உணவுகள், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை எடுத்தல் கூடாது. குறிப்பாக திருவிழாக்கள் அல்லது சடங்குகளுக்கு பிறகு சாலையில் வைக்கப்பட்டவற்றை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவை சடங்குகளின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
6.உடைந்த/சேதமடைந்த பொருட்கள்
உடைந்த கண்ணாடி, மண்பானை ஓடுகள் அல்லது சேதமடைந்த வீட்டுப் பொருட்களை எடுக்கக்கூடாது. இவை துரதிஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன.
சாலையில் இருந்து எடுக்கக்கூடிய பொருட்கள்:
சில பொருட்கள் சாலையில் கிடப்பதை நேர்மறை சகுனங்களாகவும், அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும் கருதப்படுகின்றன.
அதில் முதலிடத்தில் இருப்பது மயிலிறகு. இது கிருஷ்ணரிடம் தொடர்புடையது. மயிலிறகை கண்டால் அதை எடுத்து பத்திரமாக வீட்டில் வைப்பது சுபமாக கருதப்படுகிறது.
அதேபோல் ஆலமரம்/அரச மரம் ஆகியவற்றின் வேர்கள் கிளைகள் ஆகியவற்றை பூஜை செய்யும் நோக்கில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
பயன்படுத்தப்படாத புதியதாக இருக்கும் நல்ல பொருளைக் கண்டால், அதை எடுத்து பயன்படுத்தலாம். எனினும் யாரிடமாவது தவறி விழுந்திருக்க வாய்ப்புள்ளதால் சிறிது நேரம் அங்கு நின்று உரியவரிடம் ஒப்படைக்க முயல்வதே தர்மத்தின் வழியாகும்.
அழகிய கற்கள், கூழாங்கற்கள், கடல் சிற்பிகள், சங்குகள் போன்ற இயற்கைப. பொருட்களை சாலைகளில் நடந்து செல்லும் பொழுது சேகரித்துக் கொள்ளலாம். இவற்றில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்காது.
பொதுவான அறிவுரை:
ஒரு பொருளை பார்க்கும் பொழுது உங்களின் உள்ளுணர்வு ஏதாவது அச்சத்தையோ தயக்கத்தையோ தந்தால் எந்த காரணம் கொண்டும் அதை எடுத்தல் கூடாது. கடந்து சென்று விடுவது நல்லது.
ஒரு பொருளை வீட்டிற்குள் எடுத்து வர நேர்ந்தால் அதற்கு தீங்கு விளைவிக்கும் ஆற்றல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதிலுள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்க உப்பு நீரில் கழுவி ஊதுபத்தி அல்லது சாம்பிராணி காட்டி சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)