இந்த ராசிகளை கொண்ட ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களை விரும்புவார்களாம்..
அழகான பெண்களை விட அறிவான பெண்களை சில ராசிக்காரர்களுக்கு பிடிக்குமாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணநலன்கள் இருக்கும். அந்த வகையில் அழகான பெண்களை விட அறிவான பெண்களை சில ராசிக்காரர்களுக்கு பிடிக்குமாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்கள் முற்போக்கான சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள். கும்ப ராசியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் அழகை விட அறிவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடும் பெண்களையே இவர்களுக்கு பிடிக்கும். கும்ப ராசியை சேர்ந்த ஆண்களை ஈர்க்க வேண்டும் என்றால் நீங்கள் அறிவார்ந்த சிந்தனை கொண்ட நபராக இருக்க வேண்டும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாகவே இருப்பார்கள். உடல் தோற்றத்தை விட கூர்மையான அறிவே அதிக காந்த சக்தி கொண்டது என்று இவர்கள் நம்புவார்கள். எனவே அழகான பெண்களை விட அறிவான பெண்களை மிதுன ராசிக்காரர்களை அதிகமாக ஈர்ப்பார்களாம்..
கன்னி :
கன்னி ராசிக்கார்கள் பொதுவாகவே எதையும் ஆய்வு செய்பவர்களாகவும், உன்னிப்பாக கவனிக்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் தங்கள் துணையிடம் இருக்கும் புத்திசாலித்தனத்தை இவர்கள் அடிக்கடி பாராட்டுவார்கள். எனவே கன்னி ராசிக்காரர்கள் உடல் ரீதியான அழகை விட, ஆழமான அறிவு, தீவிரமான புரிதல் கொண்ட பெண்களை விரும்புவார்கள். எனவே புத்திசாலித்தனமாக இருக்கும் பெண்களிடம் இவர்கள் எளிதாக பிணைப்பை ஏற்படுத்துவார்கள்.
மகரம் :
வாழ்க்கையை யதார்தமான முறையில் அணுகும் மகர ராசிக்காரர்கள் புத்திசாலித்தனம் மற்றும் லட்சியமிக்கவர்கள் இருக்கும் பெண்களை விரும்புவார்கள். உடல் தோற்றத்தை பற்றி இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். வாழ்வில் வெற்றி பெற, ஆக்கப்பூர்வ யோசனைகளை வழங்கும் பெண்களை இவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.