- Home
- Astrology
- தை மாத ராசி பலன் 2026: ரவுண்டு கட்டி அடிக்கப்போகும் குரு பகவான்.! பிரச்சனை மேல் பிரச்சனை வரும்.!
தை மாத ராசி பலன் 2026: ரவுண்டு கட்டி அடிக்கப்போகும் குரு பகவான்.! பிரச்சனை மேல் பிரச்சனை வரும்.!
Thai Matha Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
Thai Matha Rasi Palan 2026 Meenam: மீன ராசிக்கு பிறக்க இருக்கும் தை மாதம் நன்மைகளும், சவால்களும் கலந்த மாதமாக இருக்கும். மாதத்தின் தொடக்கத்தில் குரு வக்ரம் பெற்றும், அர்த்தாஷ்டம குருவாகவும் இருக்கிறார். இதன் காரணமாக அடிக்கடி இட மாற்றம், அதிக விரயம் ஏற்படலாம். இந்த வீண் விரயங்களில் இருந்து விடுபட சுப விரயங்களை மேற்கொள்ளலாம் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, வீட்டை பழுது பார்ப்பது, ஆன்மீகப் பயணங்கள் போன்றவற்றில் செலவிடலாம். இந்த மாதம் குருவின் நிலை காரணமாக சில விரயச் செலவுகள் ஏற்படக்கூடும்.
குரு சஞ்சார பலன்கள்:
மிதுன ராசியில் வக்ர கதியில் குரு பகவான் சஞ்சரித்து வருகிறார். ராசிநாதனாகவும் தொழில் ஸ்தானத்தின் அதிபதியாகவும் இருக்கிறார். அவரது வக்ர இயக்கம் நன்மை பயக்கும் என்றாலும் அர்த்தாஷ்டம நிலையில் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்ப டலாம். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. நிலம் பூமி வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் மேலும் நீடிக்கலாம்.
இடமாற்றம், வீடு மாற்றம் காரணமாக மனக்கலக்கம் ஏற்படலாம். குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் விழுவதால் இழப்புகளை ஈடு செய்வதற்கு புதிய வாய்ப்புகள் வரக்கூடும். பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளில் தடை வந்து கொண்டே இருக்கலாம். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள நேரிடும். குருவின் எதிர்மறை விளைவுகளில் இருந்து தப்பிக்க குருவிற்கு உரிய சிறப்பு ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம்.
புதன் சஞ்சார பலன்கள்:
மீன ராசியின் நான்காம் மற்றும் ஏழாம் இடத்திற்கு அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். அவர் ஜனவரி 29ஆம் தேதி அன்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பெற்றோர் வழியிலும் வாழ்க்கை துணை வழியிலும் செலவுகள் ஏற்படலாம். சுப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகளின் திருமணத்தை பேசி முடிப்பீர்கள்.
நரம்பு, எலும்பு தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். புதிய பொறுப்புகளை ஏற்பதற்கு முன்னர் ஒருமுறைக்கு ஒரு முறை யோசிப்பது நல்லது. வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொண்டு பாதையை சீராக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
சுக்கிரன் சஞ்சார பலன்கள்:
சுக்கிர பகவான் பிப்ரவரி 7ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்கிறார். மீன ராசியின் மூன்று மற்றும் எட்டு ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்கிரன் 12ல் மறைவது யோகத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் திடீர் முன்னேற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் இருந்த பிரச்சனைகள் அகலும்.
பேச்சின் மூலமாக காரியத்தை சாதிப்பீர்கள். வாழ்க்கையில் சில நல்ல திருப்புங்கள் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்து வருபவர்களுக்கு கூட்டு முயற்சிகள் ஏற்படும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏற்படும் விரயங்களை சுப விரயமாக மாற்றிக் கொள்வது நல்லது.
பரிகாரங்கள்:
குரு பகவானால் ஏற்படும் தடைகளில் இருந்து நிவாரணம் பெற தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபடுவது நன்மை தரும். முன்களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

