- Home
- Astrology
- Astrology: ஜூலை 16-ல் அரிய கிரகப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டப் போகுது! அதிர்ஷ்ட மழை!
Astrology: ஜூலை 16-ல் அரிய கிரகப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டப் போகுது! அதிர்ஷ்ட மழை!
Astrology: ஜூலை 16 ஆம் தேதி சூரியன் - சந்திரன் கூட்டணியால் உருவாகும் ராசி பரிவர்த்தன யோகத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறப்போகுது. அதிர்ஷ்ட மழை பொழியும் 3 ராசிகள் எவை என்று பார்ப்போம்.

சூரியன் - சந்திரன் கூட்டணியால் ராசி பரிவர்த்தன யோகம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நடப்பு ஜூலை மாதமானது கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் அடுத்தடுத்த மாற்றங்களால் மிக முக்கிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நிகழும் கிரகப் பெயர்ச்சிகள் காரணமாகப் பல்வேறு சுப யோகங்கள் உருவாகின்றன. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசியினருக்கு இது பொற்காலமாக அமையவுள்ளது.
அந்த வகையில், வரும் ஜூலை 16 ஆம் தேதி ஜோதிட ரீதியாக ஒரு முக்கிய நாளாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களும் ஒரே நேரத்தில் தங்களின் ராசிகளை மாற்றுகின்றன.
சூரியன் கடக ராசியிலும், சந்திரன் சிம்ம ராசியிலும் நுழைவதன் மூலம் 'ராசி பரிவர்த்தன யோகம்' உருவாகிறது. ஜோதிடத்தில் இந்த கிரகங்களின் பரிமாற்றம் மிகவும் அரிய மற்றும் சக்திவாய்ந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த அபூர்வ யோகத்தால் அசுர வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
சூரிய-சந்திர பரிவர்த்தனை யோகமானது மேஷ ராசியினருக்குப் பல சாதகமான திருப்பங்களை அள்ளித்தரவுள்ளது. நீண்ட நாட்களாகக் காத்திருந்த நற்செய்திகள் உங்களைத் தேடி வரும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குப் பிரகாசமான வெற்றி வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் தொடங்கும் உங்களின் முயற்சிகளுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைக்கும். குடும்ப உறவுகளுக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, மகிழ்ச்சியும் நிம்மதியும் குடியேறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால் தொட்ட காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும்.
கடகம்
கடக ராசியில் சூரியனின் பிரவேசம் மற்றும் சந்திரனின் நகர்வு இந்த ராசிக்காரர்களுக்கு யோகக் காரணியாக அமையப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்களின் புத்துணர்ச்சியும், சுய நம்பிக்கையும் பன்மடங்கு உயரும். நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் போடும் கடின உழைப்பிற்கு ஏற்ற பண பலன்கள் கைமேல் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளைப் படைப்பர். உடன் பிறந்தவர்களால் ஆதாயமும், குடும்பத்தில் சுமுகமான சூழலும் நிலவும். உடல் ஆரோக்கியம் சீராகி புத்துணர்ச்சி தரும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த பரிவர்த்தன யோகம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் விடிவெள்ளாக அமையவுள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வு அல்லது விரும்பிய பதவி உயர்வு போன்ற சாதகமான பலன்கள் தேடி வரும். பணிச்சுமை குறைந்து நிம்மதி அதிகரிக்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்கும் தம்பதியினருக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. மன அழுத்தங்கள் நீங்கி மன அமைதி கூடும். ஆன்மீகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

