- Home
- Astrology
- புது வருடத்தில் உருவாகும் வியாதிபாதம் யோகம்.! இந்த 3 ராசிகளுக்கு அவமானமும், தோல்வியும் கிடைக்கப்போகுது.!
புது வருடத்தில் உருவாகும் வியாதிபாதம் யோகம்.! இந்த 3 ராசிகளுக்கு அவமானமும், தோல்வியும் கிடைக்கப்போகுது.!
Vyatipata Yoga: 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சூரியனும் சந்திரனும் இணைவதால் ‘வியாதிபாதம் யோகம்’ உருவாக இருக்கிறது. இது சில ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகளை தர இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

Vyatipata Yoga - வியாதிபாதம் யோகம் 2026
வேத ஜோதிடத்தில் வியாதிபாதம் யோகம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி மார்ச் 5, 2026 அன்று பிற்பகல் 3 மணியளவில் கிரகங்களின் ராஜாவான சூரியனும், மனதின் காரகரான சந்திரனும் இணைந்து வியாதிபாதம் யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக மார்ச் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். அந்த ராசிகள் யார் என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் முதல் ஐந்து நாட்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய கவனச் சிதறல்கள் கூட பெரிய அளவிலான இழப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக நிதி மற்றும் பண பரிவர்த்தனைகளின் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட் சார்ந்த துறையில் இருப்பவர்கள் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடலாம் என்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நலன் பாதிப்புக்கு உள்ளாகலாம். இது குடும்பத்தில் பதற்றத்தை அதிகரிக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் தேவையற்ற குழப்பங்கள், பயம் ஆகியவையும் ஏற்படக்கூடும்.
கன்னி
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உருவாகும் வியாதிபாதம் யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்கும். வணிகம் செய்து வருபவர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு இடையே மனக்கசப்புகள் ஏற்பட்டு பிரியும் சூழலும் உருவாகக் கூடும்.
எதிர்பார்த்து காத்திருந்த வணிக ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்காமல் போகலாம். குறுகிய காலத்தில் உங்கள் சேமிப்புகள் அனைத்தும் குறையலாம். எதிர்பாராத தீடீர் செலவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வரும் உடல்நலக் கோளாறுகள் மீண்டும் தலை தூக்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
மீனம்
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இல்லை. மார்ச் மாதத்தில் உருவாகும் வியாதிபாதம் யோகத்தின் அசுப பலன்களால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். குறிப்பாக எவ்வளவு சம்பாதித்தாலும் அனைத்து பணங்களும் செலவாகக்கூடும். பணப் பற்றாக்குறை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
குடும்ப உறவுகளிலும் அதிருப்தி ஏற்படும். வேலையிஇடத்தில் பனிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்து இருந்த பதவு உயர்வு, சம்பள உயர்வு தாமதமாகக் கூடும். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் திடீர் செலவுகளையும், நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம்.

