- Home
- Astrology
- Astrology: ராசியை மாற்றப் போகும் சூரிய பகவான்.! சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு இனிமே வசந்த காலம் தான்.!
Astrology: ராசியை மாற்றப் போகும் சூரிய பகவான்.! சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு இனிமே வசந்த காலம் தான்.!
Astrology: கிரகங்களின் ராஜாவாக அறியப்படும் சூரிய பகவான் செப்டம்பர் 17 ஆம் தேதி ராசியை மாற்றப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் மிகுந்த பலன்களை அடைய உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரிய பெயர்ச்சி 2025
ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகி மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக அறியப்படும் சூரிய பகவான் செப்டம்பர் 17 அன்று அதிகாலை 01:54 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம், தலைமைத்துவம், லட்சியங்கள் அதிகரிக்கும். அந்த வகையில் கன்னி ராசிக்குள் நுழையும் சூரியனால் பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் ஆறாவது வீட்டில் சூரிய பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. மேஷ ராசிக்காரர்களின் ஐந்தாவது வீட்டின் அதிபதியான சூரிய பகவான் தற்போது ஆறாவது வீட்டிற்குள் நுழைவதால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட உள்ளது. ஆறாம் வீடு எதிரிகள், கடன் மற்றும் நோய்களின் வீடாகும். ஆறாவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிரிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்து அடியோடு விலகி விடுவார்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். உடல்நலப் பிரச்சனைகள் சரியாகும். தொழில் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். வணிகர்கள் பெரும் வெற்றியை ஈட்டலாம். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். வணிகத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட உள்ளது. சூரியன் நான்காவது வீட்டில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு செல்ல இருக்கிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்கால திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களின் கனவுகள் படிப்படியாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி, மன மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும். சூரிய பகவானின் அருளால் ரிஷப ராசிக்காரர்கள் அடுத்த சில மாதங்களுக்கு எடுக்கும் காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் மூன்றாம் வீட்டின் அதிபதியாக விளங்கும் சூரிய பகவான் தற்போது நான்காவது வீட்டிற்குள் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படு.ம் குடும்பத்தில் இருந்த பூசல்கள் சரியாகி நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. கடந்த கால முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் பத்தாவது வீட்டின் அதிபதியாக விளங்கி வரும் சூரிய பகவான் 11 வது வீட்டிற்குள் நுழைவதால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 11 வது வீடு என்பது லாபம், வாழ்க்கை மற்றும் உடன் பிறந்தவர்களை குறிக்கும் வீடாகும். இந்த வீட்டிற்குள் சூரிய பகவான் வருவதால் குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் உங்களின் போட்டியாளர்கள் எதிரிகள் விலகிவிடுவார்கள். இதன் காரணமாக தொழில் மேம்படும். சிறிய வணிகம் நடத்தி வருபவர்கள் வணிகத்தை விரிவு செய்யும் வாய்ப்பு உண்டு. உங்கள் சேமிப்பை அதிகரிக்கலாம். இது எதிர்காலத்திற்கான பாதுகாப்பை வழங்கும். நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த பணிகள் முடிவடையும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)