MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • உச்ச வீட்டில் சூரிய பகவான்.! சித்திரை மாதம் முழுவதும் 6 ராசிகளுக்கு ராஜயோகம்.! அரசு வேலை தேடி வரும்.!

உச்ச வீட்டில் சூரிய பகவான்.! சித்திரை மாதம் முழுவதும் 6 ராசிகளுக்கு ராஜயோகம்.! அரசு வேலை தேடி வரும்.!

Sun Transit in Mesha Rasi 2026 : சூரிய பகவான் தனது உச்ச வீடான மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். இதன் காரணமாக ஆறு ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Apr 15 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Sun Transit in Mesha Rasi 2026
Image Credit : Asianet News

Sun Transit in Mesha Rasi 2026

கிரகங்களின் ராஜாவாக விளங்கி வரும் சூரிய பகவான், ஏப்ரல் 14, 2026 மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். மேஷ ராசியானது சூரிய பகவானின் உச்சக வீடாக கருதப்படுகிறது. ஒரு கிரகத்தின் உச்ச வீடு என்பது அந்த கிரகம் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் வீடாகும். எனவே சூரியனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்க உள்ளது. செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிக்கு சூரிய பகவான் பிரவேசிக்கும் பொழுது அதன் ஆற்றல் பன்மடங்கு பெருகுகிறது.

28
சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி 2026
Image Credit : Asianet News

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி 2026

மேலும் மேஷம் சூரியனின் உச்ச வீடு என்பதால் சூரிய பகவான் தனது சக்தியை முழுமையாக வெளிப்படுத்தி சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்க இருக்கிறார். சூரிய பகவானின் பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலித்தாலும் மேஷம் உட்பட ஆறு ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்க உள்ளது. இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பமாகியுள்ளது. இதன் தாக்கம் அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகளின் வாழ்வில் தெரியும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Related Articles

Related image1
செவ்வாய் பகவான் நட்சத்திர பெயர்ச்சி.! 10 நாட்களில் இந்த ராசிகளின் வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Related image2
குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? எந்த வயதில் பலன்கள் பார்க்க வேண்டும்? தேசமங்கையர்கரசி விளக்கம்.!
38
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

சூரிய பகவானின் பெயர்ச்சி மேஷ ராசியின் லக்ன ஸ்தானத்தில் நிகழ்ந்திருக்கிறது. மேஷ ராசியில் சூரியன் மிகுந்த ஆற்றலுடன் வலம் வருகிறார். சூரியன் மேஷ ராசியில் நுழைந்த பிறகு அவரது அருள் மேஷ ராசிக்கு பரிபூரணமாக கிடைக்க உள்ளது. இதுவரை முடிக்க முடியாமல் இழுபறியில் இருந்த பணிகள் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கும். அதிகாரமிக்க பதவிகள் தேடி வரும். அரசு வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலையில்லாமல் இருந்து வரும் பட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும்.

48
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

சூரியனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்க இருக்கிறது. உங்கள் தொழில் சார்ந்த முயற்சிகளில் நீங்கள் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். நிலம், சொத்து தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும். அடுத்த முப்பது நாட்கள் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும். தலைமைப் பண்பு மற்றும் அதிகாரத்தின் காரகராக விளங்கும் சூரியனின் அருளால் உயர் பதவிகள் தேடி வரும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். மனைவி வழி சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மாமனார், மைத்துனர் வழியில் இருந்த தகராறுகள் தீர்க்கப்படும். வேலையிலும் புதிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

58
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சூரியன் சிம்ம ராசியின் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்கத் தொடங்கியிருக்கிறார். ஒன்பதாவது வீடு அதிர்ஷ்ட ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே அடுத்த 30 நாட்களுக்கு நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். அரசு பணிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்திகள் கிடைக்கும். அரசு தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள், தேர்வுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். பணியில் இருப்பவர்கள் என்றால் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளும், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும்.

68
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசியின் ஏழாம் வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். ஏழாம் வீடு என்பது தொழில், திருமணம் கூட்டாண்மைகளை குறிக்கும் வீடாகும். எனவே இந்த காலக்கட்டத்தில் சூரிய பகவானின் அருளால் திருமண வாழ்வில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் இருந்த தகராறுகள் தீர்க்கப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, பரஸ்பர அன்பும், புரிதலும் வலுப்பெறும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் சரியாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கக் கூடும். வாழ்வில், மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு. கருத்து வேறுபாடால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

78
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் பெயர்ச்சி ஆக்கபூர்வமான வழிகளைக் காட்டும். இதுவரை திசை தெரியாமல் இருந்தவர்கள் சரியான பாதைக்கு திரும்பீவீர்கள். வாழ்வில் அடுத்த என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு புதிய தெளிவுகள் பிறக்கும். தலைமைப் பண்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். செலவுகள் சற்று அதிகரிக்கக் கூடும் என்றாலும், அதற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். உங்கள் தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண்பீர்கள். அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர்கள் ஊதிய உயர்வு அல்லது சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றுவது என்று அடுத்த 30 நாட்கள் உங்கள் குடும்ப வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக மாறும்.

88
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

சூரிய பகவானின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக அமையும். தன்னம்பிக்கையின் காரகரான சூரிய பகவான் உங்களின் நம்பிக்கை மற்றும் ஆற்றலை அதிகரிக்கச் செய்வார். இன்று முதல் நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் அல்லது கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கும். முடிக்க முடியாத பணிகள் விரைவாக முன்னேற்றம் காணும். வருமானத்தில் கணிசமான அதிகரிப்பை காண்பீர்கள். சொத்துக்கள் சேரும். தொழிலில் இருந்த மந்தநிலை விலகும். தொழில் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகள் விலகுவதால் தொழில் சிறக்கும். அடுத்த 30 நாட்களுக்கு புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிரிகளுக்கு எமன் இந்த 4ம் எண்: ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ரகசிய பலம் என்ன? மர்மமான குணங்களும் வெற்றிகளும்!
Recommended image2
குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? எந்த வயதில் பலன்கள் பார்க்க வேண்டும்? தேசமங்கையர்கரசி விளக்கம்.!
Recommended image3
செவ்வாய் பகவான் நட்சத்திர பெயர்ச்சி.! 10 நாட்களில் இந்த ராசிகளின் வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
செவ்வாய் பகவான் நட்சத்திர பெயர்ச்சி.! 10 நாட்களில் இந்த ராசிகளின் வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? எந்த வயதில் பலன்கள் பார்க்க வேண்டும்? தேசமங்கையர்கரசி விளக்கம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved