- Home
- Astrology
- செவ்வாய் பகவான் நட்சத்திர பெயர்ச்சி.! 10 நாட்களில் இந்த ராசிகளின் வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
செவ்வாய் பகவான் நட்சத்திர பெயர்ச்சி.! 10 நாட்களில் இந்த ராசிகளின் வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Mars Revati Nakshatra Transit 2026 : 10 நாட்களில் செவ்வாய் பகவான் தனது நட்சத்திரத்தை மாற்ற இருக்கிறார். செவ்வாய் பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாக மாற இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Mars Transit in Revati Nakshatra 2026
வேத ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் வீரம், துணிச்சல், ஆற்றல், தைரியம் ஆகியவற்றின் காரகராக அறியப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் சரியான நிலையில் அமர்ந்தால் அவர்களுக்கு உத்வேகம், துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவை நிறைந்து காணப்படும். கடினமான வேலைகளையும் செய்து முடிக்கும் திறன் அதிகரிக்கும். செவ்வாய் பகவான் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் 10 நாட்களில் அவர் நட்சத்திரத்தை மாற்ற இருக்கிறார்.
செவ்வாய் பகவான் ரேவதி நட்சத்திரப் பெயர்ச்சி
தற்போது மீன ராசியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வரும் அவர், ஏப்ரல் 24ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். ஏப்ரல் 24ஆம் தேதி அன்று அதிகாலை 2:30 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் செவ்வாய் பகவான், ரேவதி நட்சத்திரத்தில் அமர இருக்கிறார். ரேவதி நட்சத்திரம் புதன் பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். இந்த காலகட்டத்தில் புதன் இயக்கத்திலும் மாறுதல் ஏற்படுகிறது. செவ்வாய் பகவானின் நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் ஐந்தாம் வீட்டில் செவ்வாய் பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. ஐந்தாம் வீடு பஞ்சம ஸ்தானம் என்றும், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக குடும்ப உறவுகளில் விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை கேட்பீர்கள். வேலையில்லாமல் இருந்து வரும் பட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான முடிவுகள் கிடைக்கலாம். காதல் உறவுகள் சுமூகமாக மாறும். குடும்பத்திற்கும் அல்லது உங்களுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு
தனுசு ராசியின் நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி அடைய இருக்கிறார். நான்காம் வீடு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பல விதங்களில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
உங்கள் நட்பு வட்டங்கள் மூலமாக புதிய தொழிலுக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்வுகள் நடக்கும். இதன் காரணமாக சுப விரயங்கள் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் செவ்வாய் பகவானின் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக நீங்கள் பணி சார்ந்த சிறப்பான முடிவுகளைப் பெறுவீர்கள். வேலையிடத்தில் உங்களின் பணி சிறக்கும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் மற்றும் ஆதரவைப் பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் மூத்தவர்களின் சொல்படி நடந்தால் வாழ்வு சிறக்கும். காதல் வாழ்க்கை இனிமையானதாக மாறும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். பொருளாதார ரீதியாக மேம்பாடு கிடைக்கும். செலவுகள் அதிகமானாலும் அதை ஈடு கட்டும் வகையில் பண வரவும் இருக்கும். உபரி வரவால் கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

