MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சனி பகவான் வீட்டில் குடியேறும் சூரியன்.! 5 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!

சனி பகவான் வீட்டில் குடியேறும் சூரியன்.! 5 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!

Surya Peyarchi Palangal: இன்று பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது 5 ராசிகளுக்கு சுப பலன்களை அளிக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 13 2026, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Surya Peyarchi 2026
Image Credit : Asianet News

Surya Peyarchi 2026

வேத ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். அவர் ஒவ்வொரு முறையும் தனது ராசியை மாற்றும் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 13, 2026 வெள்ளிக்கிழமை காலை 4:08 மணிக்கு சூரியன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக மாசி மாதம் பிறக்கிறது. சூரிய பெயர்ச்சியால் நன்மைகளைப் பெறப்போகும் அந்த 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசியின் பத்தாம் வீட்டிற்குள் நுழைகிறார். பத்தாம் வீடானது தொழில் மற்றும் கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே வேலை மற்றும் தொழிலில் புதிய ஒளி பிறக்கும். சூரிய பகவானின் பெயர்ச்சி வாழ்வில் புதிய நம்பிக்கைக்களைத் தரும். மன அழுத்த பிரச்சனைகள் தீரும். திருமணம் கைகூடும்.

36
கடகம்
Image Credit : stockPhoto

கடகம்

சூரியன் கடக ராசியின் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த பெயர்ச்சியின் சுப பலன்களால் கடக ராசிக்காரர்களுக்கு தடைபட்ட பல வேலைகள் விரைவாக முடியும். பணிச்சுமை குறையும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எடுக்கும் வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்ய விரும்பியவர்களின் கனவு நனவாகும். உடல் நலம் குறித்த நேர்மறை ஆற்றல் பிறக்கும்.

46
சிம்மம்
Image Credit : Pinterest

சிம்மம்

சூரியன் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டிற்குள் நுழைகிறார். ஏழாவது வீடு களத்திர ஸ்தானமாகும். இது திருமண உறவுகள் மற்றும் தொழில் கூட்டாண்மைகளை குறிக்கும் வீடாகும். இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் பல அற்புதங்களைக் கொண்டுவரும். உங்கள் தைரியம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் பிறக்கும்.

56
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டிற்குள் நுழைகிறார். ஐந்தாம் வீடு என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி உங்கள் தொழில், வியாபாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் தகவல் தொடர்பு திறன் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். படித்து முடித்து காத்திருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து நேர்காணலுக்கான அழைப்புகள் வரலாம்.

66
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

சூரியன் உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டிற்குள் நுழைகிறார். நான்காம் வீடு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சியின் போது, தனுசு ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். திருமணம் குறித்த சுப செய்திகள் தேடி வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Saturn Transit : சனி பகவான் தரப்போகும் டபுள் பலன்கள்! 2027 வரை அதிர்ஷ்டக் காற்று வீசும் 7 ராசிகள்!
Recommended image2
Astrology: பல ஆண்டுகளுக்கு பின் அரிதான குரு-கேது சேர்க்கை.. 4 ராசிகளுக்கு ஜாக்பாட்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Recommended image3
10/10 Portal : அக்டோபர் 10 ஏன் இவ்வளவு ஸ்பெஷல்? எண் கணித ரகசியமும், அமாவாசையும்.. எந்த ராசிகளுக்கு சிறப்பு?
Related Stories
Recommended image1
100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சந்திக்கும் 3 கிரகங்கள்.! 5 ராசிகளின் தலையெழுத்து மாறப்போகுது.!
Recommended image2
மிதுன ராசியில் நடக்கும் அரிய நிகழ்வு.! 5 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved