- Home
- Astrology
- சூரிய பெயர்ச்சி தரும் ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
சூரிய பெயர்ச்சி தரும் ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Sun Transit 2026: சூரியன் ஆகஸ்ட் 31 அன்று சுக்கிரனின் பூர நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைவதால், 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலன்களும் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கவுள்ளன. இது குறித்து விரிவாக பார்ப்போம்

சூரிய பெயர்ச்சி 2026 தரும் ராஜயோகம்
நவகிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவானின் ஒவ்வொரு பெயர்ச்சியும் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம். ஆற்றல், தலைமைப் பண்பு, கம்பீரம், வெற்றி மற்றும் சமூக அந்தஸ்திற்கு காரகராகத் திகழும் சூரியன், ஆகஸ்ட் மாத இறுதியில் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள பூர நட்சத்திரத்திற்குத் தன் பயணத்தை மாற்றுகிறார்.
ஆகஸ்ட் 31 அன்று நிகழும் இந்த முக்கிய நட்சத்திரப் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தவுள்ளது. எந்தெந்த ராசிகள் இதன் மூலம் அமோக பலன்களைப் பெறப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்திற்குள் சூரியன் செல்வதால், இவர்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும். நீண்டநாட்களாக உங்களை வாட்டி வதைத்த கடன் மற்றும் பணப் பிரச்சனைகள் விலகி, புதிய வருமான வழிகள் திறக்கும். சேமிப்பும் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகளிடையே பரஸ்பர அன்பும் நன்மதிப்பும் கூடும். மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியினருக்கு இந்த மாற்றம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தரும். பணியிடத்தில் உங்கள் தலைமைப் பண்பு மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ற நல்ல வேலை உடனடியாகக் கிடைக்கும்.
தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் இது உகந்த நேரம். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். முயற்சிக்கும் அனைத்துக் காரியங்களிலும் அதிர்ஷ்டத்தின் துணை இருக்கும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற முழு பலனும் கைமேல் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பல மடங்கு உயர்த்தும். புதிய கூட்டுத் தொழில்கள் அல்லது ஒப்பந்தங்கள் மூலமாகப் நல்ல வருமானம் கிடைக்கும். வியாபார எல்லைகளை விரிவுபடுத்த வாய்ப்புகள் தேடி வரும்.
உங்களின் நற்பெயர் சமூகம் மற்றும் பணியிடத்தில் உயரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்குப் பொருத்தமான வரன் அமையும். தம்பதியருக்குள் புரிதல் அதிகரிக்கும். பெரிய அளவிலான உடல்நலப் பாதிப்புகள் ஏதும் வராது.
தனுசு
தனுசு ராசியினருக்குச் சூரியனின் இந்த நகர்வு திடீர் அதிர்ஷ்டத்தையும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றத்தையும் கொண்டு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குக் காத்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
புதிய வருமானக் கதவுகள் திறக்கும். இலக்குகளை மிக எளிதாக அடைவீர்கள். பணத்தைச் சரியான வழியில் சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். உங்களின் முடிவெடுக்கும் திறனும், மன வலிமையும் கூடும். உங்கள் முயற்சிகளுக்கு உடலும் மனமும் முழு ஒத்துழைப்பு நல்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.as

