- Home
- Astrology
- Astrology: செப்டம்பர் மாத ராசிபலன் 2026: இந்த 3 ராசிகளுக்கு கடும் சோதனை.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Astrology: செப்டம்பர் மாத ராசிபலன் 2026: இந்த 3 ராசிகளுக்கு கடும் சோதனை.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Astrology: செப்டம்பர் மாதத்தில் சக்திவாய்ந்த கிரகங்கள் இடம் மாறுவதால் 3 ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பித்துள்ளது. அந்த ராசிகள் என்னென்ன? அவர்கள் தப்பிக்க பரிகாரங்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

செப்டம்பர் மாத ராசிபலன் 2026
ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து, செப்டம்பர் மாதம் பிறக்கவுள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரகங்கள் தங்கள் இடங்களை மாற்றுகின்றன. கிரகங்களின் இந்த நகர்வுகள் சில ராசிகளுக்கு யோகத்தையும் நன்மைகளையும் தந்தாலும், சில குறிப்பிட்ட ராசிகளுக்குக் கடுமையான சோதனைகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, நிதி நிலைமை, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சில ராசியினர் இந்த மாதத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். செப்டம்பர் மாத கிரக நிலைகளின்படி, எந்தெந்த ராசிக்காரர்கள் சவால்களையும் துரதிர்ஷ்டத்தையும் சந்திக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து கீழே விரிவாகக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த செப்டம்பர் மாதம் சற்று சிரமங்கள் நிறைந்ததாகவே அமையக்கூடும். எதிர்பார்க்காத திடீர் செலவுகள் உங்களின் நிதிச் சமநிலையைப் பாதிக்கலாம். இதனால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.
வேலை பார்க்கும் இடத்தில் சூழல் உங்களுக்குச் சாதகமாக இல்லாமல் போகலாம். தொழிலில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்குரிய உரிய பலனோ அல்லது வருமானமோ உடனடி கிடைக்காமல் த தாமதமாகலாம். குடும்பத்தில் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் சிறு சிறு விஷயங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே, வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. நிதி இழப்புகள் தற்காலிகமானது என்பதால் பதற்றமடையாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.
பரிகாரம்: பணக்கஷ்டம் மற்றும் குடும்பத்தில் நிம்மதி நிலவ, புதன்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு வரவிருக்கும் மாதம் சில தடைகளும், நெருக்கடிகளும் நிறைந்ததாக இருக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் தீர ஆலோசித்து எடுப்பது அவசியமாகும். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதோடு, பணத்தைச் சேமிப்பதிலும் தடைகள் ஏற்படலாம்.
நிதி நெருக்கடியைத் தவிர்க்க அத்தியாவசியமற்ற செலவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. உங்கள் பேச்சை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. எனவே பேசுவதில் நிதானம் தேவை. உங்கள் தனிப்பட்ட மற்றும் ரகசிய விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
பரிகாரம்: தடைகள் நீங்கி, வாக்குவாதம் தவிர்த்து வெற்றிகளைப் பெற, ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு செவ்வரளி மலர் சாற்றி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் கேட்கவும்.
தனுசு
செப்டம்பர் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு நஷ்டங்களும், ஆபத்துகளும் நிறைந்த மாதமாக இருக்கலாம். இந்த மாதத்தில் அவர்கள் சில உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளை மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த மாதம் நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
பரிகாரம்: உடல்நலன் சீராகி, தொழில் மற்றும் வியாபார நஷ்டங்களில் இருந்து தப்ப, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.

