MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • நீச்சபங்க ராஜயோகம் 2026: கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

நீச்சபங்க ராஜயோகம் 2026: கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Neechabhanga Raja Yoga 2026: கடகத்தில் குரு மற்றும் செவ்வாய் ஒன்றாக இணைவதால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் 4 ராசிகள் கோடீஸ்வர யோகம் பெறப்போகின்றன. அவை எந்தெந்த ராசிகள்? என பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 24 2026, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நீச்சபங்க ராஜயோகம் 2026
Image Credit : AI

நீச்சபங்க ராஜயோகம் 2026

ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களின் தளபதியாக போற்றப்படுபவர் செவ்வாய் பகவான். தைரியம், தன்னம்பிக்கை, வீரம், ஆற்றல் மற்றும் நிலப் புலன்களுக்கு அதிபதியாக விளங்கும் இவர், தோராயமாக 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசி இருப்பிடத்தை மாற்றக்கூடியவர்.

அந்த வகையில், தற்போது மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் பகவான், விரைவில் கடக ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளார். ஏற்கனவே கடக ராசியில் சுப கிரகமான குரு பகவான் உச்சம் பெற்றுப் பயணித்து வருகிறார். இதனால், கடகத்தில் குரு மற்றும் செவ்வாய் ஒன்றாக இணையும் அரிய கிரக சேர்க்கை நிகழ்கிறது.

நீச்சபங்க ராஜயோகம் என்றால் என்ன?

பொதுவாக கடக ராசி என்பது செவ்வாய் பகவானுக்கு 'நீச்ச' வீடாகும். அதாவது அங்கு செவ்வாய் தன் முழு பலத்தையும் இழப்பார். ஆனால், அதே கடக ராசியில் குரு பகவான் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், செவ்வாயின் நீச்சத் தன்மை நீங்கி ‘நீச்சபங்க ராஜயோகம்’ உருவாகிறது.

இந்த யோகமானது தொழில் வளர்ச்சி, நிதி முன்னேற்றம், புதிய சொத்து சேர்க்கை மற்றும் வியாபார விரிவாக்கம் ஆகியவற்றில் மிகச் சிறந்த நன்மைகளைத் தரும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே பிரதிபலித்தாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அமையவிருக்கும் யோகப் பலன்களை விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம்
Image Credit : ChatGPT

1. மேஷம்

மேஷ ராசிக்கு 4-வது வீடான சுக ஸ்தானத்தில் இந்த யோகம் அமைவதால், சொத்து மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல திருப்புமுனை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கும், பணியில் இருப்பவர்களுக்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்கும் கனவு நினைவேறும். தடைபட்ட காரியங்கள் சுலபமாக முடிவடையும். கணவன்-மனைவி இடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும்.

Related Articles

Related image1
குழந்தைகள் பிறந்தவுடன் ஜாதகம் எழுதலாமா? எந்த வயதில் ஜாதகம் கணிப்பது நல்லது? ஜோதிட நிபுணர்கள் விளக்கம்!
Related image2
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! பண மழை!
35
2. மிதுனம்
Image Credit : ChatGPT

2. மிதுனம்

மிதுன ராசிக்கு 2-வது வீடான தன ஸ்தானத்தில் குரு-செவ்வாய் சேர்க்கை நடப்பதால், நிதிச் சிக்கல்கள் விலகி பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் நிலுவையில் இருந்த பண நிலுவைகள் வசூலாகும். வருமானத்தை உயர்த்த புதிய வழிகள் பிறக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்கள் பேச்சுத் திறமையால் பணியிடத்திலும், சமூகத்திலும் காரியங்களைச் சாதிப்பீர்கள். மாணவர்களுக்குப் படிப்பில் சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது. அவசரப்பட்டு முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.

45
3. கடகம்
Image Credit : ChatGPT

3. கடகம்

கடக ராசியின் லக்னம் எனப்படும் முதல் வீட்டிலேயே இந்த நீச்சபங்க ராஜயோகம் உருவாகுவதால், உங்களுக்குள் புதிய தன்னம்பிக்கையும் ஆளுமையும் மிளிரும். நிலுவையில் இருந்த வேலைகள் விரைவாக முடிவடையும். வேலை பார்க்கும் இடத்தில் புதிய பொறுப்புகளும், பாராட்டுக்களும் தேடி வரும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

55
4. தனுசு
Image Credit : ChatGPT

4. தனுசு

தனுசு ராசிக்கு 8-வது வீட்டில் இந்த யோகம் அமைவதால், எதிர்பாராத பணவரவும், கடன் சுமைகளில் இருந்து விடுதலையும் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போதும், புதிய சொத்துக்கள் வாங்கும்போதும் ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்த்துப் பரிசீலிப்பது அவசியம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! பண மழை!
Recommended image2
Bad Omen: வெளியே கிளம்பும்போது பின்னாடி கூப்பிட்டா அபசகுனமா? இந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன?
Recommended image3
Today Horoscope: திங்கட்கிழமை ராசிபலன்: இன்று 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
Related Stories
Recommended image1
குழந்தைகள் பிறந்தவுடன் ஜாதகம் எழுதலாமா? எந்த வயதில் ஜாதகம் கணிப்பது நல்லது? ஜோதிட நிபுணர்கள் விளக்கம்!
Recommended image2
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! பண மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved