MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குழந்தைகள் பிறந்தவுடன் ஜாதகம் எழுதலாமா? எந்த வயதில் ஜாதகம் கணிப்பது நல்லது? ஜோதிட நிபுணர்கள் விளக்கம்!

குழந்தைகள் பிறந்தவுடன் ஜாதகம் எழுதலாமா? எந்த வயதில் ஜாதகம் கணிப்பது நல்லது? ஜோதிட நிபுணர்கள் விளக்கம்!

Newborn Horoscope: குழந்தைகள் பிறந்த உடன் ஜாதகம் எழுதலாமா? எந்த வயதில் ஜாதகம் கணிக்கலாம்? என பலருக்கும் சந்தேகம் உள்ளது. இதற்கு ஜோதிட நிபுணர்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். வாங்க செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 24 2026, 06:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குழந்தைகள் பிறந்தவுடன் ஜாதகம் எழுதலாமா?
Image Credit : AI

குழந்தைகள் பிறந்தவுடன் ஜாதகம் எழுதலாமா?

இந்து பாரம்பரியத்தில் ஒருவரின் ஜாதகம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு குழந்தை பிறக்கும் துல்லியமான தருணத்தில், விண்வெளியில் நவகிரகங்கள் எந்தெந்த ராசிகளிலும் வீடுகளிலும் சஞ்சரிக்கின்றன என்பதை அடிப்படையாக கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி ஜாதகம் என்பது ஒருவரின் குணநலன், ஆரோக்கியம், கல்வி, தொழில், வாழ்க்கைத்துணை மற்றும் எதிர்கால வாழ்க்கைப் பயணத்தை துல்லியமாக அறிந்து கொள்ள உதவுகிறது என நம்பப்படுகிறது.

ஆனாலலும் குழந்தைப் பிறந்தவுடன் ஜாதகம் கணிக்கலாமா? குழந்தைகளுக்கான ஜாதக பலன்களை எப்போது கேட்க வேண்டும்? என்பது குறித்தும் பலரிடம் குழப்பம் நீடித்து வருகிறது. இதுகுறித்து பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி உள்பட ஜோதிட ஆர்வலர்கள் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜாதகம் எழுத சரியான வயது எது?
Image Credit : google

ஜாதகம் எழுத சரியான வயது எது?

ஜோதிட நிபுணர்களின் கருத்துப்படி, உங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக குழந்தை பிறந்தவுடனேயே ஜாதகம் எழுதும் பழக்கம் இருந்தால், அதை அப்படியே தொடர்ந்து பின்பற்றுவது நல்லது. முன்னோர்களின் வழிமுறையை மாற்ற வேண்டியதில்லை.

அதே வேளையில் குடும்பத்தில் குறிப்பிட்ட வழக்கங்கள் எதுவும் இல்லாதவர்கள், ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, குழந்தை பிறந்து 1 ஆண்டு முழுமையாக நிறைவடைந்த பிறகே ஜாதகம் எழுத வேண்டும்.

Related Articles

Related image1
Astrology: இளமையிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் கொண்ட 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Related image2
கிருஷ்ண ஜெயந்தி 2026: கிருஷ்ணரின் அருளால் அமோக யோகம் பெறப்போகும் 5 ராசிகள்.. ஜாக்பாட்!
34
குழந்தைகளுக்கான பலன்கள் எப்போது பார்க்க வேண்டும்?
Image Credit : Getty

குழந்தைகளுக்கான பலன்கள் எப்போது பார்க்க வேண்டும்?

ஒரு குழந்தைக்கு ஜாதகம் எழுதிய உடனடியாக ஜோதிடரிடம் சென்று எதிர்கால பலன்களைக் கேட்கக் கூடாது. சிறு குழந்தைகளின் செயல்பாடுகள் அனைத்தும் இறைவனின் சங்கல்பப்படி நடப்பதால், அவர்களுக்கு 12 வயது வரை பலன் பார்க்கத் தேவையில்லை.

12 வயதிற்குள் குழந்தைக்குத் தொடர்ச்சியான உடல்நலக் குறைபாடு, தீவிர நோய் பாதிப்புகள் அல்லது கல்வியில் கடுமையான கவனச்சிதறல் போன்ற ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மட்டுமே ஜோதிட ஆலோசனையைப் பெறலாம். மற்றபடி 12 வயது வரை குழந்தைகளுக்கு ஜோதிட பலன்களை பார்க்க அவசியமில்லை.

உங்கள் குழந்தையின் 12 வயதிற்கு மேல் உயர் கல்வி, வெளிநாட்டுப் பயணம் அல்லது அவசியமான தேவைகள் எழும் தருணங்களில் மட்டும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

44
பெண் குழந்தைகளுக்கு எப்போது ஜாதகம் கணிப்பது?
Image Credit : Pinterest

பெண் குழந்தைகளுக்கு எப்போது ஜாதகம் கணிப்பது?

பெண் குழந்தைகளுக்கு 1 வயது முடிந்ததும் ஜாதகம் கணித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பூப்படையும் பருவம் வரை பலன்கள் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் பூப்படையும் துல்லியமான நேரத்தைக் குறித்து வைத்து, "ருது ஜாதகம்" கணிப்பது முக்கியம். எதிர்காலத்தில் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது மணமகன் வீட்டார் இதைக் கேட்க வாய்ப்புள்ளது என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒட்டுமொத்ததில் தெளிவாக சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுக்கு ஜாதகம் கணித்த பின் அதை வீட்டில் உள்ள பூஜை அறையிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைத்துவிட வேண்டும். மேலே குறிப்பிட்ட அவசியத் தேவைகளோ அல்லது உடல்நலப் பிரச்சனைகளோ இல்லாத பட்சத்தில், திருமணத்தின் போது பொருத்தம் பார்ப்பதற்காக மட்டுமே ஜாதகத்தை வெளியே எடுப்பது சிறந்தது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rudraksha Rules: பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? சிவபுராணம் சொல்லும் விதிகள் என்ன?
Recommended image2
Revenge Zodiacs: பழிவாங்குவதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரங்க... வருஷமானாலும் மறக்க மாட்டாங்க!
Recommended image3
கிருஷ்ண ஜெயந்தி 2026: கிருஷ்ணரின் அருளால் அமோக யோகம் பெறப்போகும் 5 ராசிகள்.. ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
Astrology: இளமையிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் கொண்ட 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Recommended image2
கிருஷ்ண ஜெயந்தி 2026: கிருஷ்ணரின் அருளால் அமோக யோகம் பெறப்போகும் 5 ராசிகள்.. ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved