- Home
- Astrology
- சூரியன்-சனி அரிய சேர்க்கையால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. தொழில், லாபம், பண மழை பொழிய போகுது!
சூரியன்-சனி அரிய சேர்க்கையால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. தொழில், லாபம், பண மழை பொழிய போகுது!
Sun-Saturn Opposition: சூரியன்-சனி அரிய நேர் பார்வையால் 3 ராசிகளுக்கு தொழில், லாபம் மற்றும் பண மழை பொழியும் பொன்னான காலம் பிறந்துள்ளது. இந்த ராசிகளுக்கான விரிவான பலன்களை பார்ப்போம்.

சனி-சூரியனின் அரிய நேர் பார்வை
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நீதிமானாகவும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவராகவும் சனி பகவான் கருதப்படுகிறார். நவகிரகங்களில் மிக மெதுவான இயக்கத்தைக் கொண்ட இவர், ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்கக்கூடியவர். தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் சனி பகவான், பிற கிரகங்களின் தாக்கத்துடன் இணைந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சூரியனும் சனியும் ராசி மண்டலத்தில் ஒன்றுக்கொன்று நேர் எதிரே அமைந்துள்ளனர். ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இந்த அரிய கிரக மாற்றத்தால், சில ராசிக்காரர்களின் வாழ்வில் பொன்னான மாற்றங்களும் நற்பலன்களும் உண்டாகப் போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
1. சிம்மம்
சிம்ம ராசியின் எட்டாம் வீட்டில் சனி பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதும், இரண்டாம் வீட்டில் சூரியன் அமர்வதும் இவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பலத்த சிக்கல்களையும் விலக்கப் போகிறது. இனி வரும் காலங்கள் உங்களுக்குத் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் புதிய வாசல்களைத் திறக்கும். அலுவலகத்தில் உங்களின் உழைப்புக்குரிய அங்கீகாரமும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் பன்மடங்கு பெருகும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றமும், புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். நிதி மேலாண்மை சிறப்பாக இருப்பதுடன், சேமிக்கும் திறனும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
2. கன்னி
சூரியன் மற்றும் சனியின் இந்த சம சப்தம பார்வை கன்னி ராசியினருக்குத் தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் பெரிய அளவிலான சாதகமான திருப்பங்களைத் தரக் காத்துக்கொண்டிருக்கிறது. சனி ஏழாம் வீட்டிலும், சூரியன் லக்ன வீட்டிலும் செல்வாக்கு செலுத்துவதால், கணவன்-மனைவிக்கிடையே அல்லது கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கம் பிறக்கும்.
பொருளாதாரரீதியாக இது மிக வலிமையான காலம். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வருவதுடன், நீண்ட நாட்களாகத் தொல்லை தந்து வந்த கடன்களும் அடையும். நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறி பணப் புழக்கத்தை அதிகரிக்கும். நீண்ட கால லட்சியங்களை அடைவதற்கான உறுதுணையான சூழல் அமையும்.
3. தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கிரக அமைப்பு கடந்த கால சவால்களிலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் பெரும் விடுதலையைத் தரும். உங்களின் செயல்திறனும் தலைமைப் பண்பும் இந்த காலகட்டத்தில் பல மடங்கு உயரும். அனைத்து முயற்சிகளிலும் காலத்தின் அனுகூலமும் அதிர்ஷ்டமும் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவத் தொடங்கும். வாழ்க்கைத்துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்துகொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் போனஸ் போன்ற நற்செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு
இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான ஜோதிட நம்பிக்கைகள், பாரம்பரிய முறைகள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இதற்கு அறிவியல் பூர்வமான உறுதியான ஆதாரங்கள் இல்லை. வாசகர்கள் இவற்றை வழிகாட்டுதல்களாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

