- Home
- Astrology
- சுக்ராதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகம்.. மேஷம் முதல் மிதுனம் வரை.. 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!
சுக்ராதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகம்.. மேஷம் முதல் மிதுனம் வரை.. 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!
Astrology predictions: துலாம் ராசியில் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளதால் மேஷம், மிதுனம், துலாம், தனுசு ஆகிய 4 ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் பெருகும் பொற்கால வந்துள்ளது.

சுக்ராதித்ய யோகம் 2026
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் மாதந்தோறும் தனது ராசி சுழற்சியை மாற்றுகிறார். அந்த வகையில், கடந்த அக்டோபர் 17 அன்று கன்னி ராசியில் இருந்து விலகி துலாம் ராசிக்குள் சூரியன் கால்பதித்தார். ஏற்கனவே அங்கு சுக்கிர பகவான் அமர்ந்திருக்கும் நிலையில், இவ்விரு கிரகங்களின் அற்புதமான சேர்க்கையால் மிக வலிமையான 'சுக்ராதித்ய யோகம்' உருவாகியுள்ளது.
குறிப்பாக, சுக்கிரனின் சொந்த ராசியான துலாத்திலேயே இந்த யோகம் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சத்தை மேலும் கூட்டுகிறது. இந்த அரிய கிரகச் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலித்தாலும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு இது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையையும் பொற்காலத்தையும் தரப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இப்போது விரிவாக பார்ப்போம்.
1. மேஷம்
மேஷ ராசிக்கு 7-வது வீட்டில் இந்த சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. தொழில் மற்றும் உத்தியோக ரீதியில் புதிய உச்சங்களைத் தொடக்கூடிய வாய்ப்பு அமையும். பணியிடத்தில் உங்களின் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைப்பதோடு, உயரதிகாரிகளின் பாராட்டுதலும் புதிய பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும்.
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாகும். காதலில் உள்ளவர்களுக்கு உறவு இன்னும் பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும்.
2. மிதுனம்
மிதுன ராசிக்கு 9-வது பாக்யஸ்தானத்தில் இந்த யோகம் அமைந்துள்ளதால், அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த ஆன்மீகப் பயணங்கள் அல்லது வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, உயர் கல்விக்கான முயற்சிகளும் எளிதில் பலனளிக்கும். தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலையில் இருந்த தொய்வு நீங்கி, சேமிப்பு அதிகரிக்கும்.
3. துலாம்
துலாம் ராசியின் லக்ன வீடான முதல் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் இணைந்து இந்த சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிப்பதோடு, ஆடம்பர வசதிகளும் பெருகும். சமூகத்தில் உங்களின் பெயரும் புகழும் உயரும்.
நீண்ட காலமாக இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் தடைகளின்றி வெற்றிகரமாக முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கூடிவரும். சட்ட விவகாரங்கள் மற்றும் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரக்கூடும்.
4. தனுசு
தனுசு ராசிக்கு 11-வது லாப வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாவதால், பண வரவு பல வழிகளிலும் பெருகும். இதுவரை நீங்கள் செய்த கடின உழைப்பிற்கான பலன் இப்போது இரட்டிப்பாக கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்தி நல்ல லாபம் பார்க்கலாம். வேலை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு வெளிநாடு அல்லது முன்னணி நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் லாபகரமாக அமையும்.
பொறுப்பு துறப்பு
இந்த செய்தி கட்டுரையில் தகவல்கள் அனைத்தும் பொதுவான ஜோதிட நம்பிக்கைகள், பாரம்பரிய குறிப்புகள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் மற்றும் கணிப்புகள் பொதுவானவை.
இவை அனைத்திற்கும் நூறு சதவீதம் துல்லியமான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. ஒவ்வொருவரின் ஜாதகக் கட்டத்தில் உள்ள கிரக நிலைகளைப் பொறுத்து பலன்கள் மாறுபட வாய்ப்புள்ளது. வாசகர்கள் இந்தத் தகவல்களைப் பின்பற்றுவதோ அல்லது இதன் அடிப்படையில் முக்கிய முடிவுகளை எடுப்பதோ அவரவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது.








