- Home
- Astrology
- இந்த ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி.! புத்தாண்டு முதல் இந்த 4 ராசிகளுக்கு வசந்த காலம் தொடங்கும்.!
இந்த ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி.! புத்தாண்டு முதல் இந்த 4 ராசிகளுக்கு வசந்த காலம் தொடங்கும்.!
Sukra Peyarchi 2025 in Tamil: சுக்கிர பகவான் டிசம்பர் மாத இறுதியில் தனது நட்சத்திரத்தை மாற்றி, சொந்த நட்சத்திரத்திற்கு குடியேற இருக்கிறார். இதன் காரணமாக புத்தாண்டு முதல் நான்கு ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெற உள்ளனர்.

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் சுக்கிரன் சுப கிரகமாக அறியப்படுகிறார். அவர் செல்வம், ஆடம்பரம், அழகு, இன்பம், பொருள், வீடு திருமண வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கும் கிரகமாவார். இந்த ஆண்டு டிசம்பர் 30, 2025 அவர் தனது நட்சத்திரத்தை மாற்றி, தனது சொந்த நட்சத்திரமான பூராட நட்சத்திரத்திற்கு சஞ்சரிக்கிறார். இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சாதகமான பலன்களை வழங்க இருக்கிறார். சில காலமாக நிதி நெருக்கடிகளை சந்தித்து வந்த ரிஷப ராசிக்காரர்கள், அதிலிருந்து நிவாரணம் பெறப்போகிறீர்கள். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த தகராறுகள் தீர்க்கப்பட்டு பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை மகிழ்ச்சியான பாதைக்கு திரும்பும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர மாற்றமானது புதிய திசையை காட்டும். வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி காணப்படும். சொத்து, நிலம், வீடு போன்ற விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கு புத்தாண்டு முதல் தீர்வு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து வாழ்க்கை சீராக மாறும்.
துலாம்
துலாம் ராசிக்கு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் நேர்மறையான பலன்களைக் கொண்டு வரும். மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். கடந்த காலங்களில் செய்த முதலீடுகளில் இருந்து தற்போது நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் தகராறுகள் தீர்க்கப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகி, சொத்துக்கள் கைக்கு வரும். தன்னம்பிக்கை உயரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் வரப்பிரசாதமாக அமையும். சனியின் தாக்கத்தால் பிரச்சனைகளை சந்தித்து வரும் மீன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் சம்பந்தமாக நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக மாறும். படைப்பாற்றல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நன்மைகளைப் பெறுவீர்கள். வருமானம் உயரும். வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகள் உருவாகும். நிதி ரீதியாக நல்ல நிலையை அடைவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

