- Home
- Astrology
- சனி பெயர்ச்சி 2026: 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி பகவான்.! கோடிகளை வாரி சுருட்டப் போகும் ராசிகள்.!
சனி பெயர்ச்சி 2026: 76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி பகவான்.! கோடிகளை வாரி சுருட்டப் போகும் ராசிகள்.!
Sani Peyarchi 2026: ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக அறியப்படும் சனி பகவான் தனது சக்தியை இழந்திருக்கிறார். அது குறித்தும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவர் நீதிமானாகவும், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்க கூடியவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் அவர் பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார். சுமார் 76 நாட்களுக்கு பிப்ரவரி 2026 வரை அவர் பலவீனமான நிலையில் பயணிக்கிறார்.
ஒரு கிரகம் ஜீரோ டிகிரி நிலையில் இருந்தால் அது வலுவிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அந்த கிரகத்தால் முழுமையான பலன்களை தர இயலாது. சனி பகவான் 0° நிலையில் வலுவிழந்து இருப்பதால் அவரது தாக்கத்தால் கஷ்டப்பட்டு வந்த சில ராசிக்காரர்கள் அடுத்த 76 நாட்களுக்கு கஷ்டங்களிலிருந்து விடுதலை பெற இருக்கின்றனர். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்கு ஆறாவது வீட்டில் சனி பகவான் பெயர்ச்சியாகிறார். ஆறாவது வீடு சக்தி வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்களுக்கு இருந்து வந்த கல்வித் தடைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனவு நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் பணியிடம் மாறுதல் ஆகியவை கிடைக்கலாம். நிதி நிலைமை வலுப்பெறும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசியின் இரண்டாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இரண்டாவது வீடு தன ஸ்தானம் ஆகும். சனியின் பலம் குறைவாக இருப்பதால் கும்ப ராசிக்காரர்களின் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த உடல் நலப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். குடும்பத் தகராறுகள் தீர்ந்து அமைதியும், செழிப்பும் அதிகரிக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் குறையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் முதல் வீட்டில் இருக்கிறார். அவர் பலவீனமான நிலையை அடைந்திருப்பதால் மீன ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த மன அழுத்தம் நீங்கும். தடைபட்டு நின்ற வேலைகள் வேகம் எடுக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். உறவிலிருந்து சிக்கல்கள் தீரும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் லாபத்தையும், வளர்ச்சியையும் காண்பீர்கள். வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

