MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சூரிய கிரகண நாளில் குரு புதன் உருவாக்கும் சிறப்பு அம்சம்.! 5 ராசிகளின் தொழில் வாழ்க்கை உச்சம் பெறும்.! செல்வம் பெருகும்.!

சூரிய கிரகண நாளில் குரு புதன் உருவாக்கும் சிறப்பு அம்சம்.! 5 ராசிகளின் தொழில் வாழ்க்கை உச்சம் பெறும்.! செல்வம் பெருகும்.!

குரு புதன் பகவான் இருவரும் ஒருவருக்கொருவர் சிறப்பு சேர்க்கையில் அமர்ந்து நவபஞ்சம யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 11 2026, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நவபஞ்சம யோகம் 2026
Image Credit : Asianet News

நவபஞ்சம யோகம் 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 5 அல்லது 9 ஆம் வீட்டில் இருக்கும்போது ‘நவபஞ்சம யோகம்’ உருவாகிறது. அந்த வகையில் பிப்ரவரி 17, 2026 அன்று காலை 2:59 மணியளவில் புதன் மற்றும் குருவுக்கு இடையில் 120 டிகிரி சிறப்பு கோணத்தில் இந்த ராஜயோகம் உருவாக இருக்கிறது.

இந்த யோகத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றாலும், 5 ராசிக்காரர்கள் சிறப்பு பலன்களை பெறுவார்கள். அது குறித்து இங்கு காணலாம்.

26
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

நவபஞ்சம உருவாகும் நேரம் ரிஷப ராசிக்கு சுப பலன்களைத் தரும். இந்த யோகமானது உங்கள் நிதி விஷயங்களில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும். உங்கள் கடின உழைப்பு பணியிடத்தில் பாராட்டப்படும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் விரிவாக்கத்திற்கான நடவடிக்கைகள் வேகம் எடுக்கும்.

Related Articles

Related image1
கும்ப ராசியில் நடக்கும் மகா சேர்க்கை.! 5 ராசிகளின் வாழ்வில் இருள் நீங்கும்.! அதிர்ஷ்டம் கொட்டும்.!
Related image2
கும்ப ராசியில் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு பாவம், பழி, அவமானம் தேடி வரப்போகுது.!
36
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசியை புதன் ஆள்வதால், இந்த நேரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சரியான முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்கள் லாபம் காண்பீர்கள். பல வழிகளில் இழந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள்.

46
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

நவபஞ்சம யோகத்தால் உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

56
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசியின் அதிபதியாக குரு இருப்பதால், இந்த சேர்க்கை உங்கள் தன்னம்பிக்கையையும், அதிர்ஷ்டத்தையும் வலுப்படுத்தும். முன்பு தடைபட்டிருந்த பணிகள் படிப்படியாக முடிவடையும். உங்கள் தொழிலில் ஒரு புதிய திசையைக் காணலாம்.

66
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

இந்த யோகம் மன அமைதி மற்றும் நிதி முன்னேற்றம் இரண்டையும் கொண்டு வரும். புதிய வாய்ப்புகள் வரலாம். ஆராய்ச்சி, ஆன்மீகம் அல்லது கல்வியில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் கிடைக்கும். உறவுகளும் மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கும்ப ராசியில் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு பாவம், பழி, அவமானம் தேடி வரப்போகுது.!
Recommended image2
கும்ப ராசியில் நடக்கும் மகா சேர்க்கை.! 5 ராசிகளின் வாழ்வில் இருள் நீங்கும்.! அதிர்ஷ்டம் கொட்டும்.!
Recommended image3
கும்ப ராசியில் சந்திர கிரகணம்: குபேர யோகம் பெறப்போகும் அந்த 3 ராசிகள் யார்? உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
கும்ப ராசியில் நடக்கும் மகா சேர்க்கை.! 5 ராசிகளின் வாழ்வில் இருள் நீங்கும்.! அதிர்ஷ்டம் கொட்டும்.!
Recommended image2
கும்ப ராசியில் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு பாவம், பழி, அவமானம் தேடி வரப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved