MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ஜாதகத்தில் ராகு பலவீனமாக இருந்தால் கஷ்டகாலம் தான்.! ராகுவை அமைதிப்படுத்தும் எளிய பரிகாரங்கள்

Astrology: ஜாதகத்தில் ராகு பலவீனமாக இருந்தால் கஷ்டகாலம் தான்.! ராகுவை அமைதிப்படுத்தும் எளிய பரிகாரங்கள்

ஜாதகத்தில் ராகு கிரகத்தின் தீய பலன்களை குறைத்து, அதை நல்லதாக மாற்றுவதற்கு எளிய பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Aug 26 2025, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராகுவின் எதிர்மறைகளை தீர்க்கும் பரிகாரங்கள்
Image Credit : AI Generated

ராகுவின் எதிர்மறைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

வேத ஜோதிடத்தின் படி ராகு கிரகம் ஒரு நிழல் கிரகமாக அறியப்படுகிறது. இந்த கிரகத்தின் இயல்பு மர்மமானது மற்றும் நிச்சயமற்றது. ஜோதிடத்தின் படி ராகு கிரகமானது மாயை, ஆசை மற்றும் உலகியல் இன்பங்களுடன் தொடர்புடையது. ராகு ஒரு நபருக்கு திடீர் செல்வம், புகழ் அல்லது சவால்களை கொண்டு வருவார். ராகு பாதகமாக இருக்கும் பொழுது மனக்குழப்பம், தவறான முடிவுகள், எதிர்பாராத தடைகளை உருவாக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ராகு கிரகம் ஏற்படுத்தும் தாக்கங்கள்
Image Credit : AI Generated

ராகு கிரகம் ஏற்படுத்தும் தாக்கங்கள்

ராகு கிரகமானது ஜாதகத்தில் எதிர்மறையான அல்லது அபசகுணமான நிலையில் இருந்தால் அந்த நபருக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது என்றும், அவர் வாழ்நாள் முழுவதும் போராட்டங்களையே சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. ராகு கிரகத்தால் பாதிக்கப்படுபவர்கள் மன அமைதியின்மை, கோபம், பயம், நிதி நெருக்கடி மற்றும் வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நிலையில் ராகு கிரகத்தை அமைதிப்படுத்துவதற்கு சில பரிகாரங்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
ராகு மந்திரத்தை ஜெபிக்கும் முறை
Image Credit : AI Generated

ராகு மந்திரத்தை ஜெபிக்கும் முறை

ராகு கிரகத்தின் எதிர்மறை தாக்கத்தை குறைக்க ராகு மந்திரத்தை தினமும் ஜெபிப்பது நன்மை தரும். “ஓம் ராகுவே நமஹ” என்கிற மந்திரத்தை தினமும் 108 முறை காலை அல்லது மாலை வேளையில் அமைதியான இடத்தில் அமர்ந்து ஜெபிக்க வேண்டும். ஒரு சிறிய தீபத்தை ஏற்றி வைத்து அதன் முன் அமர்ந்து ராகுவை மனதில் நினைத்து வணங்க வேண்டும். இது மன அமைதியை அளிக்கும் மற்றும் ராகுவின் எதிர்மறை ஆற்றலை குறைக்கும்.
 

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள்

ராகுவின் தாக்கத்தை குறைப்பதற்கு அதற்கு உரிய பொருட்களை தானம் செய்ய வேண்டியது பலன்களைத் தரும். கருப்பு எள், கருப்பு துணி, கருப்பு கடலை, தேங்காய், நீல நிறப் பொருட்களை தானம் செய்யலாம். இந்த பொருட்களை சனிக்கிழமை அல்லது அமாவாசை நாட்களில் ஏழைகளுக்கு கோவில்களில் தானமாக வழங்க வேண்டும். இதை செய்யும் பொழுது ராகுவின் ஆசியை வேண்டி மனதாரப் பிரார்த்தனை செய்யவும்.

45
பரிகார தலங்கள்
Image Credit : AI Generated

பரிகார தலங்கள்

ராகுவின் தாக்கத்தை குறைப்பதற்கு குறிப்பிடக் கோயில்களில் வழிபாடு செய்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆந்திராவில் அமைந்துள்ள காளஹஸ்தி ராகு கேது பரிகாரத்திற்கு மிகவும் பிரபலமான கோயிலாகும். திருவண்ணாமலை நாகநாதர் கோவிலில் ராகு வழிபாடு செய்பவர்களுக்கு ராகு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த கோயில்களில் ராகு காலத்தில் காலை 7:30 மணி முதல் 9:00 வரை அல்லது மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை பூஜை செய்வது பலன்களைத் தரும்.
 

கோமேதகம் அணியலாம்

ராகுவின் தாக்கத்தை குறைக்க உணவு முறைகளிலும் சில மாற்றங்களை செய்யலாம். சனிக்கிழமைகளில் உப்பு இல்லாமல் உணவு சாப்பிடுவது, கருப்பு எள் அல்லது கருப்பு கடலை சேர்த்த உணவுகளை உட்கொள்வது, மது, புகைப்பிடித்தல், போதைப் பழக்கங்களை தவிர்ப்பது ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம். இவை ராகுவின் எதிர்மறை தாக்கத்தை குறைக்க உதவும். ராகுவின் தாக்கத்தை குறைக்க நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணியலாம். கோமேதகம் கல்லை மோதிரம் அல்லது பதக்கமாக அணியலாம். இதை அணிவதற்கு முன்னர் தகுதியான ஜோதிட ஆலோசனையைப் பெற வேண்டும்.

55
ஜோதிட ஆலோசனை அவசியம்
Image Credit : AI Generated

ஜோதிட ஆலோசனை அவசியம்

ராகு எப்போதும் எதிர்மறையாக மட்டும் செயல்படுவதில்லை. அவர் சரியான நிலையில் இருக்கும்பொழுது ஒரு நபருக்கு செல்வம், புகழ் மற்றும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவார். எனவே ராகுவின் நன்மைகளை பெற மேற்கூறிய பரிகாரங்கள் முறையாக பின்பற்றுவது அவசியம். ராகுவின் எதிர்மறை தாக்கத்தை குறைப்பது ஒரு நபரின் வாழ்க்கையில் மன அமைதி, செல்வம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரும். மந்திர ஜெபம், தானம், கோயில் வழிபாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் ராகுவின் எதிர்மறை தாக்கத்தை குறைக்கலாம். இந்த பரிகாரங்களை செய்வதற்கு முன்னர் தகுதியான ஜோதிட ஆலோசனை பெறுவது நல்லது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் வேறுபட்டவை என்பதால் ஜோதிடரின் முறையான வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சிம்மத்தில் நுழையும் செவ்வாய்: அதிர்ஷ்டக் கதவை தட்டப்போகும் 4 ராசிகள்.. இனி பணமழை!
Recommended image2
Weekly Rasi Palan : நவம்பர் 1 முதல் 7 வரை.. 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?
Recommended image3
Astrology: நவம்பர் முதல் வாரம் ஆரம்பம்..! 12 ராசிகளில் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போவது யாருக்கு..?
Related Stories
Recommended image1
Rahu Lucky Zodiac Signs : ராகுவின் அருள்பெற்ற ராசிகள்: உங்களுக்கு அதிர்ஷ்டம், வெளிநாட்டு யோகம் தேடி வரபோகுது!
Recommended image2
Astrology: குரு பகவானுக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள் எது தெரியுமா? இவர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved