- Home
- Astrology
- Jan 30 Simma Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, சிம்ம ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.! அள்ளி அள்ளி கொடுக்கப்போகும் கிரகங்கள்.!
Jan 30 Simma Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, சிம்ம ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.! அள்ளி அள்ளி கொடுக்கப்போகும் கிரகங்கள்.!
January 30, 2026 Simma Rasi Palangal: ஜனவரி 30, 2026 சிம்ம ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:
இன்று உங்கள் ஆற்றல் அதிகரித்து காணப்படும். உங்கள் தன்னம்பிக்கையால் கடினமான பணிகளையும் விரைவாக செய்து முடிப்பீர்கள். எதிர்கால நலனைக் கருதி முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக உணர்வீர்கள்.
நிதி நிலைமை:
இன்று தொழில் மற்றும் வியாபாரம் சிறக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். அதிக பணத்தை சேமிக்க முடியும். வங்கி இருப்பு கணிசமாக அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக சிறு தொகையை செலவிட நேரிடலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று வாழ்க்கை துணையுடன் உணர்ச்சிபூர்வமான பிணைப்புகள் ஏற்படும். உங்கள் மனதில் இருந்த பல விஷயங்களை வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இதன் காரணமாக நல்லுணர்வு வளரும். பணியிடத்தில் உங்கள் தகுதிகள் பாராட்டப்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
பரிகாரம்:
சித்தர்களின் கோவில்கள் அல்லது ஜீவசமாதிகளுக்குச் சென்று வழிபடுவது மனதிற்கு அமைதி தரும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது நன்மைகளை இரட்டிப்பாக்கும். இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு ஒரு வேலைக்கான உணவு வாங்கி அளிப்பது சிறந்தது.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

