MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • 2026-ல் உருவாகும் கொடிய விஷபோதக யோகம்.! நிலைகுலையப்போகும் 3 ராசிகள்.! இந்த ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பம்.!

2026-ல் உருவாகும் கொடிய விஷபோதக யோகம்.! நிலைகுலையப்போகும் 3 ராசிகள்.! இந்த ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பம்.!

visphotak yog unlucky zodiac signs: பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் பகவான் ராகுவுடன் இணைந்து விஷபோதக யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jan 02 2026, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஷபோதக யோகம் 2026
Image Credit : Asianet News

விஷபோதக யோகம் 2026

நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், ஆற்றல் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். பிப்ரவரி 23, 2026 காலை 11:57 மணிக்கு கும்ப ராசியில் நுழையும் செவ்வாய் பகவான், ஏப்ரல் 2, 2026 வரை அந்த ராசியிலேயே பயணிப்பார். 

ஏற்கனவே கும்ப ராசியில் பாவ கிரகமான ராகு பகவான் வசிக்கிறார். செவ்வாய்-ராகு இணைவால் விஷபோதக யோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டத்தை அளிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு விஷபோதக யோகம் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை நிலை இருக்கிறது. இதன் காரணமாக உங்கள் ஆசைகள் நிறைவேறாமல் போகலாம். சிறிய வேலைகளுக்கு கூட அதிக முயற்சி தேவைப்படக்கூடும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதனால் மன அழுத்தம் உருவாகும். மேஷ ராசிக்கு ஏழரை சனியும் நடைபெறுவதால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையின் உடல்நலத்தில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

34
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. மேலும் தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மன அழுத்தம், உடல் நலனில் மந்த நிலை மற்றும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். தொழில்களில் நஷ்டம், முதலீடுகளில் நிதி இழப்புகள் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் குடும்ப விஷயங்களை பொறுமையாக கையாள்வது அவசியம். பேச்சில் நிதானம் தேவை.

44
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசியின் இரண்டாம் வீட்டில் விஷபோதக யோகம் உருவாகிறது. இது தன ஸ்தானம் என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். முதலீடுகளை செய்வதற்கு முன்னர் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலன் குறித்த கவலைகளும் ஏற்படலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். உடன் பிறந்தவர்களின் உடல்நிலையில் பின்னடைவுகள் ஏற்படலாம். தேவையற்ற பண விரயம், குடும்பத்தில் வாக்குவாதங்கள், கண் தொடர்பான உபாதைகள் ஏற்படும். ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும்பொழுது நிதானம் அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
புத்தாண்டு
புத்தாண்டு 2026
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mars Transit : பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, ராஜயோகம் தேடி வரும்!
Recommended image2
Venus Retrograde : வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்... தீபாவளிக்குப் பிறகு பணக்கார யோகத்தைப் பெறும் 7 ராசிகள்!
Recommended image3
11:11 ஏஞ்சல் நம்பர் தரும் ஆச்சரிய பலன்கள்: இது வெறும் தற்செயல் இல்லையாம்... நிஜக் காரணம் இதோ!
Related Stories
Recommended image1
Sukra Thisai: ஜனவரியில் தொடங்கும் சுக்கிர திசை.! இந்த 5 ராசிகள் வீடு, கார், பங்களான்னு வசதியா வாழப்போறீங்க.!
Recommended image2
Astrology: கிரகங்களின் மகா கூட்டணி.! 12 வருடங்களுக்குப் பின் மிதுனத்தில் அதிரடி மாற்றம்! பலன் பெறப்போகும் ராசிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved