MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Shani Vakra Peyarchi 2026: ஜூலை 27 முதல் சனியின் வக்ர கதி ஆரம்பம்! யாருக்கு பணமழை? ராஜயோகம் பெறப்போகும் அந்த 6 ராசிகள் யார் தெரியுமா?

Shani Vakra Peyarchi 2026: ஜூலை 27 முதல் சனியின் வக்ர கதி ஆரம்பம்! யாருக்கு பணமழை? ராஜயோகம் பெறப்போகும் அந்த 6 ராசிகள் யார் தெரியுமா?

Astrology: ஜூலை 27 முதல் டிசம்பர் 12 வரை தனது வக்ர இயக்கத்தைத் தொடங்குகிறார். ஜூலை 26 அன்று நிகழவிருக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகாரர்களுக்கு எதிரொலித்தாலும், குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு மட்டும் ராஜயோக' காலமாக அமையப் போகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 18 2026, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சனி வக்ர பெயர்ச்சி
Image Credit : Asianet News

சனி வக்ர பெயர்ச்சி

தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் வரும் ஜூலை 27 முதல் டிசம்பர் 12 வரை தனது வக்ர இயக்கத்தைத் தொடங்குகிறார். ஜூலை 26 அன்று நிகழவிருக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகாரர்களுக்கு எதிரொலித்தாலும், குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு மட்டும் ராஜயோக' காலமாக அமையப் போகிறது. சனி பகவானின் இந்த வக்ர கதியால் உடனடி சுப பலன்களையும், அள்ள அள்ளக் குறையாத நன்மைகளையும் பெறப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ரிஷபம்: திடீர் பண மழை
Image Credit : Pixabay

ரிஷபம்: திடீர் பண மழை

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி அற்புதம் நிறைந்ததாக அமையப்போகிறது. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பதவி உயர்வு உங்களை தேடி வரும். தொழில் வாழ்க்கையில் அதிவேக முன்னேற்றத்துடன், எதிர்பாராத திடீர் பண வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். முடங்கிக் கிடந்த வணிகம் விறுவிறுப்படைந்து அசுர லாபத்தை தரும்.

37
மிதுனம்: சீரான வருமானம்
Image Credit : Pixabay

மிதுனம்: சீரான வருமானம்

மிதுன ராசியினருக்கு சனி வக்ர பெயர்ச்சியால் பல நாட்களாக இருந்த தடைகள் விலகி நன்மைகள் குவியும். நீண்ட நாள் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். கைக்கு வராமல் இழுத்தடித்த பழைய பாக்கிகள் அனைத்தும் உரிய நேரத்தில் வந்து சேரும். வருமானம் நாளுக்கு நாள் சீராக உயரும். பணியில் இருப்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உருவாகும்.

47
கடகம்: கைகூடும் ராஜயோகம்
Image Credit : Pixabay

கடகம்: கைகூடும் ராஜயோகம்

சனி வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மிக உன்னதமான செழிப்பையும், அளப்பரிய வெற்றியையும் அனுபவிக்கப் போகிறார்கள். அரசியல் செல்வாக்கு உயரும். அரசு துறையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் நிச்சயம் உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கௌரவமான குடும்பத்தில் இருந்து வரன் அமைந்து திருமண உறவு உறுதியாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். போட்டித் தேர்வுகள், நேர்காணல்களில் பெரும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

57
துலாம்: அந்தஸ்து உயரும்.
Image Credit : Pixabay

துலாம்: அந்தஸ்து உயரும்.

துலாம் ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை வாரி வழங்க போகிறது. சமுதாயத்தில் உங்களது மதிப்பும் அந்தஸ்தும் பல மடங்கு உயரும். தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்கள் பெரும் லாபத்தை ஈட்டித் தரும். பணப் பிரச்சனைகள், தனிப்பட்ட குழப்பங்கள் மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைபாடுகள் நீங்கி நிம்மதி பிறக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிட்டும்; பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.

67
விருச்சிகம்: குறைந்த உழைப்பு... நிறைந்த லாபம்
Image Credit : Pixabay

விருச்சிகம்: குறைந்த உழைப்பு... நிறைந்த லாபம்

சனி வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் மிக எளிதாக வெற்றியை எட்டுவார்கள். குறைந்த முயற்சியிலேயே நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் லாபத்தை ஈட்ட முடியும். புதிய மனிதர்களின் தொடர்புகளால் நன்மைகள் பெருகும். நீங்கள் நீண்ட நாட்களாக விரும்பிய இடமாற்றம் அல்லது புதிய வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு தானாகவே அமையும். சனி பகவானின் அருளால் குழந்தை பாக்கியமும் உண்டாகும்.

77
மகரம்: கனவிலும் நினைக்கா சுப நிகழ்வுகள்
Image Credit : Pixabay

மகரம்: கனவிலும் நினைக்கா சுப நிகழ்வுகள்

மகர ராசியினருக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியானது கற்பனைக்கு எட்டாத சுப பலன்களை அள்ளித் தரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து, உயர் பதவிகளை அடைவீர்கள். சம்பள உயர்வும், பதவி உயர்வும் தேடி வரும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து, எதிர்பாராத வழிகளில் பலத்த பண வரவு உண்டாகும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய முன்னணி நிறுவனங்களிலேயே வேலை கிடைக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
அக்டோபர் இறுதியில் சம்பவம் இருக்கு..! சூரியன் + புதன் + சுக்கிரன் சேர்க்கை.. 5 ராசிக்கு பணமழை!
Recommended image2
Shasha Raj Yoga : கஜகேசரி + சச ராஜயோகம்... 58 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ யோகத்தால் 6 ராசிகளுக்கு ராஜவழி திறக்கப்போகுது!
Recommended image3
Property Horoscope: வீடு, நிலம் வாங்கும் யோகம் வருது... இந்த 7 ராசிகளுக்கு சொத்து சேரும் வாய்ப்பு!
Related Stories
Recommended image1
zodiac signs: Overthinking செய்து குழப்பத்திலேயே வாழும் 5 ராசிக்காரர்கள்
Recommended image2
Astrology: நண்பேன்டா! நட்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள்! உங்க நண்பர்கள் ராசி இருக்கானு பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved