MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mars Saturn Conjunction: விதியை மாற்றப்போகும் சனி-செவ்வாய் சேர்க்கை! இந்த 5 ராசிகளுக்கு மட்டும் குபேர யோகம் - லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களா?

Mars Saturn Conjunction: விதியை மாற்றப்போகும் சனி-செவ்வாய் சேர்க்கை! இந்த 5 ராசிகளுக்கு மட்டும் குபேர யோகம் - லிஸ்ட்ல நீங்க இருக்கீங்களா?

ஏப்ரல் 20-ம் தேதி நிகழும் சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் அபூர்வச் சேர்க்கையினால், மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம் ஆகிய 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப்போகிறது. முழுமையான ராசிபலன், யோக விவரங்கள் இங்கே.

3 Min read
Author : Rsiva kumar
Published : Apr 18 2026, 05:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
விதியை மாற்றப்போகும் சனி செவ்வாய் சேர்க்கை
Image Credit : Asianet News

விதியை மாற்றப்போகும் சனி-செவ்வாய் சேர்க்கை

ஏப்ரல் 20 அன்று நிகழும் சனி - செவ்வாய் சேர்க்கை, ஒரு சில ராசிகளுக்குப் பிடிவாத குணத்தைக் குறைத்து, விடாமுயற்சியின் மூலம் வெற்றியைத் தேடித்தரப் போகிறது. சனியின் நிதானமும், செவ்வாயின் வேகமும் இணையும் போது அந்த ராசிகளின் பொருளாதார நிலை மளமளவென உயரும். இந்த 2 கிரகங்கள் இணையும் போது தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். சனி செவ்வாய் கிரக சேர்க்கையால் மேஷம், ரிஷபம், கடகம், துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு என்ன மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
மேஷ ராசி
Image Credit : Social Media

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனி-செவ்வாய் சேர்க்கை ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வருமானத்துக்குப் புதிய வழிகள் திறக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. நீங்கள் சுய தொழில் செய்பவர் என்றால், பழைய பாணியைக் கைவிட்டு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவீர்கள். சனி பகவான் உங்களுக்கு நிதானத்தைத் தருவார், செவ்வாய் உங்களுக்குச் செயல்படும் ஆற்றலைத் தருவார். இந்த இரண்டுமே இணைந்து உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். செவ்வாய்க்கிழமை தோறும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுவது சனியின் தாக்கத்தைக் குறைத்து செவ்வாயின் பலத்தைக் கூட்டும். 

36
ரிஷப ராசி
Image Credit : Asianet News

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்கள் வேலையில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் நிதி முடிவுகள் நல்ல பலன்களைக் கொடுக்கும். பழைய முதலீடுகள் இப்போது லாபம் தரத் தொடங்கும். மன அமைதி கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுப்பெறும். ரிஷப ராசியைப் பொறுத்தவரை, உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனி-செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. பொதுவாக 10-ம் இடம் என்பது ஒருவரின் கர்ம வினை மற்றும் தொழில் வெற்றியைக் குறிக்கும் இடமாகும். இங்கு சனியும், செவ்வாயும் இணைவது உங்கள் கேரியரில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கும். நீண்ட நாட்களாகச் சுய தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு இந்தச் சேர்க்கை ஒரு வழிகாட்டியாக அமையும். குறிப்பாக இரும்பு, மின்சாரம், ரியல் எஸ்டேட் மற்றும் இயந்திரம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

46
கடக ராசி
Image Credit : Asianet News

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இது 'கடின உழைப்புக்கான' நேரம். வெற்றி மெதுவாக வந்தாலும் உறுதியாக வரும். வேலையில் உங்கள் குழுவினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடக ராசியைப் பொறுத்தவரை, உங்கள் ராசிக்கு 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இந்த சனி-செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. பொதுவாக 8-ம் இடம் என்பது சவால்கள் மற்றும் எதிர்பாராத மாற்றங்களைக் குறிக்கும் இடமாகும். கடக ராசிக்கு 8-ல் ஏற்கனவே சனி பகவான் 'அஷ்டமச் சனியாக' அமர்ந்து நிதானத்தைக் கொடுத்து வரும் நிலையில், தற்போது செவ்வாய் அங்கு இணைவது ஒருவித பதற்றமான சூழலை உருவாக்கலாம். 8-ம் இடம் என்பது மறைமுகப் பண வரவைக் குறிக்கும். சனி-செவ்வாய் சேர்க்கையால் இன்சூரன்ஸ் முதிர்வுத் தொகை, உயில் வழி சொத்துக்கள் அல்லது நீண்ட நாள் வராது என்று கைவிட்ட பணம் எதிர்பாராமல் கைக்கு வந்து சேரும்.

56
துலாம் ராசி
Image Credit : Getty

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும். பாதியில் நின்ற திட்டங்கள் மீண்டும் தொடங்கும். நல்ல நிதி வாய்ப்புகள் உருவாகும். உறவுகள் மேம்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். துலாம் ராசியைப் பொறுத்தவரை, உங்கள் ராசிநாதன் சுக்கிரனுக்கு சனி பகவான் மிகச்சிறந்த நட்பு கிரகம். இந்த ஏப்ரல் 20-ம் தேதி நிகழும் சனி-செவ்வாய் சேர்க்கை, உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிகழ்கிறது. 5-ம் இடம் என்பது புத்திசாலித்தனம், காதல், குழந்தைகள் மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் இடமாகும். 5-ம் இடத்தில் சனி-செவ்வாய் இணைவதால் உங்கள் சிந்தனைத் திறன் கூடும். இதுவரை குழப்பிக் கொண்டிருந்த விஷயங்களில் ஒரு தெளிவு கிடைக்கும். ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் அதன் சாதக பாதகங்களை மிகச்சரியாகக் கணிப்பீர்கள்.

66
மகரம் ராசி
Image Credit : istock

மகரம் ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை உழைப்புக்கு நல்ல லாபத்தைத் தரும். சனி ஒழுக்கத்தையும், செவ்வாய் ஆற்றலையும் கொடுக்கும். வேலையில் பெரிய சாதனை செய்ய வாய்ப்புள்ளது. பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மகர ராசியைப் பொறுத்தவரை, உங்கள் ராசிநாதன் சனி பகவான் தனது சொந்த வீடான 2-ம் இடத்தில் அமர்ந்துள்ளார். இப்போது அவருடன் 'நெருப்பு' கிரகமான செவ்வாய் இணைகிறார். மகர ராசிக்கு 2-ம் இடம் என்பது தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் ஆகும். உங்கள் ராசிநாதனே அங்கு வலுவாக இருப்பதால், இந்தச் சேர்க்கை உங்களுக்குப் பல சவால்களைக் கொடுத்தாலும், இறுதியில் ஒரு பெரிய 'பொருளாதாரப் புரட்சியை' ஏற்படுத்தும். உங்கள் ராசிநாதன் சனியுடன், லாபங்களை அள்ளித்தரும் செவ்வாய் இணைவதால் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் வரத் தொடங்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட், வண்டி வாகனங்கள் மூலம் லாபம் இரட்டிப்பாகும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அட்சய திருதியை நாளில் சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! இனிமே இந்த ராசிகள் வாழ்வில் பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!
Recommended image2
Baba Vanga Predictions: 2026-க்குள் இந்த 5 ராசிகள் லைப் டோட்டலாக மாறப்போகுது.. பாபா வாங்காவின் கணிப்பு.!
Recommended image3
அட்சய திருதியை: டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கும் நல்ல நேரம் பார்க்க வேண்டுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved