- Home
- Astrology
- Zodiac Signs : 138 நாட்களுக்குப் பிறகு 3 ராசிகளுக்கு ராஜயோகம்; இனி ஜாலி மோடு தான் – சனி வக்ர நிவர்த்தி பலன்!
Zodiac Signs : 138 நாட்களுக்குப் பிறகு 3 ராசிகளுக்கு ராஜயோகம்; இனி ஜாலி மோடு தான் – சனி வக்ர நிவர்த்தி பலன்!
Sani Vakra Nivarthi 2025 Palan : சனி பகவான் வக்ர நிலையில் இருக்கும் நிலையில் வரும் நவம்பர் 28ஆம் தேதி முதல் தனது வக்ர நிலையை மாற்றி நேர்கதியில் பயணிப்பதால் மிதுனம், துலாம் மற்றும் மகர ராசியினருக்கு ராஜயோகம் உண்டாகும்.

138 நாட்களுக்குப் பிறகு 3 ராசிகளுக்கு ராஜயோகம்
சனி கிரகம் நவம்பர் 28, 2025 அன்று தனது வக்ர நிலையிலிருந்து மாறி, மீண்டும் நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறது. இந்த மாற்றம், கடந்த ஜூலை 13 முதல் சனிபகவானால் ஏற்பட்ட தாமதங்கள், சவால்கள் மற்றும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும். சனி பகவான் நேர்கதியில் பயணிக்க தொடங்கும் நிலையில் மிதுனம், துலாம் மற்றும் மகரம் ராசியினருக்கு ராஜயோகம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பண வரவு, மன அமைதி, உறவுகளில் முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசிக்கான சனி வக்ர நிவர்த்தி பலன்
சனி பகவான் 2025 ஆம் ஆண்டில் கடந்த ஜூலை 13, 2025 அன்று மீன ராசியில் வக்ரம் அடைந்தார். இந்த வக்ரம் வரும் நவம்பர் மாதம் வரையில் நீடிக்கும் நிலையில் அதன் பிறகு, நவம்பர் 28, 2025 அன்று மீண்டும் வக்ர நிவர்த்தி அடைவார். அதாவது நேர்கதியில் பயணிக்க தொடங்குவார். சனி பகவானின் இந்த வக்ர நிவர்த்தி காலம் 138 நாட்களுக்கு பிறகு நிகழ்கிறது.
சனி பகவான் வக்ர நிவர்த்தி அல்லது நேர்கதி பலனானது மிதுன ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் குறையத் தொடங்கும். இந்த நேரத்தில், வேலையில் வெற்றி கிடைக்கும், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். அதே நேரத்தில், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் அன்பு அதிகரிக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு நன்மை பயக்கும்.
துலாம் ராசிக்கான சனி வக்ர நிக்வர்த்தி அல்லது நேர்கதி பயணம்
சனியின் நேர்கதி துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். நிதி நிலை சீராக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டிலும் குடும்பத்திலும் அமைதியான சூழல் நிலவும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம்.
மகரம் ராசிக்கான சனி வக்ர நிவர்த்தி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு, சனியின் நேர்கதி வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். நல்ல முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உறவுகள் வலுப்பெறும். தொழில் சார்ந்த முடிவுகளை எச்சரிக்கையுடன் எடுப்பது நல்லது. உங்கள் துணையிடமிருந்தும் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துவதும் நல்லது.