MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Sani Peyarchi Palan: சூரிய கிரகண நாளில் மீன ராசியில் ராகு உடன் சனி கூட்டணி; 6 கிரக சேர்க்கை கவனம்!!

Sani Peyarchi Palan: சூரிய கிரகண நாளில் மீன ராசியில் ராகு உடன் சனி கூட்டணி; 6 கிரக சேர்க்கை கவனம்!!

நீர் ராசியான மீன ராசியில் சனியும் ராகுவும் கூட்டணி சேரப்போகின்றன. பங்குனி மாதம் 15ஆம் தேதி மார்ச் 29ஆம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். அதே நாளில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன்,ராகு என ஐந்து கிரகங்கள் மீன ராசியில் இணைந்திருக்கும் போது சனி இணைவதால் உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூரிய கிரகண நாளில் 6 கிரகங்கள் சேரப்போவதால் எந்த ராசிக்காரர்கள் இந்த நாளில் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

2 Min read
Web Team
Published : Jul 18 2024, 01:28 PM IST| Updated : Jul 18 2024, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சனி கேது

சனி கேது

ஜாதகத்தில் சனி ராகு கூட்டணி அமைந்தவர்களுக்கு அதிக கல்வியறிவு இருக்கும். இவர்கள் அரசருக்கு நிகராக பணியாள்கள் சூழ இருப்பார்கள். நிலங்கள், வீடு வாசல், மாடு, கன்றுகள், பால்பாக்யம், கீர்த்தி, வண்டி, வாகனங்கள் முதலியவற்றுடன் பலரும் மதிக்கும்படியாக வாழ்வார்கள். இவர்களுக்குச் சகோதர, சகோதரி வகையில் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும்.பெண்களால் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். இவர்களில் பலர் சட்டம் படித்து, நீதித் துறையில் உயர்பதவி வகிப்பதுடன், நீதியை மிக நேர்மையுடன் கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

27
நீதிமான் சனிபகவான்

நீதிமான் சனிபகவான்

ராகுவானது ஒரு மனிதனின் கர்மத்தை சேகரிக்கும் கிரகம். இந்த கிரகத்தையே முன்னோர்கள் என்று குறிக்கப்படுகிறது. சனியானது இருக்கின்ற கர்மத்தின் அளவின்படி அதை அடிப்படையாகக் கொண்டு தண்டனை வழங்கும் கிரகம். அப்படிப்பட்ட இரண்டு கிரகங்கள் இணைவு என்பது மிகுந்த கர்மத்தை குறிக்கும் அமைப்பாகும்.

37
ரிஷபம்

ரிஷபம்

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லாப ஸ்தானத்தில் சனியும் ராகுவும் கூட்டணி சேரும் காலம் என்பதால் செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும்.  திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். வெளிநாட்டு வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் உள்ள குருவின் மீது விழுவதும் கூடுதல் பலம். சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானை வணங்குவது நல்லது.
 

47
மிதுனம்

மிதுனம்

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் ராகு உடன் கூட்டணி சேருவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆறு கிரக சேர்க்கை தொழில் வியாபார வளர்ச்சியை கொடுக்கப்போகிறது.  புது வேலை கிடைக்கும். பதவியில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். 2025ஆம் ஆண்டில் ராகு சனியால் கிடைக்கப்போகும் பதவி, சொத்துக்களை யாராலும் தடுக்க முடியாது.  
 

57
கடகம்

கடகம்

அஷ்டம சனி முடிந்து 2025ஆம் ஆண்டு முதல் பாக்கிய சனி காலம் ஆரம்பிக்க போகிறது. ராகு உடன் சனி இணையப்போவதால் பணவருமானம் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.  தர்ம சனி காலத்தில்  வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். 9ஆம் வீட்டில் 6 கிரகங்கள் இணையும் காலத்தில் அற்புத யோகங்கள் தேடி வரப்போகிறது.

67
துலாம்

துலாம்

சனி பகவான் ஆறாம் வீட்டில் ராகு உடன் இணைந்து ராஜாதி ராஜயோகத்தை தரப்போகிறார். உங்களை வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும். மனக் கவலைகள் காணாமல் போகும்.  கடன் பிரச்சினைகள் தீரும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும்.  புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உங்களுக்கு ராஜயோக காலம். அனுபவிக்கத் தயாராகுங்கள். அதே நேரத்தில் 6 ஆம் வீட்டில் 6 கிரகங்கள் சேர்க்கை உள்ளதால் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய வேண்டாம். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும்.

77
மகரம்

மகரம்

ஏழரை ஆண்டுகாலமாக மகரம் ராசிக்காரர்களை சனி ஆட்டி படைத்தது.  2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் ராகு உடன் இணையப்போவதால் நன்மைகள் தேடி வரப்போகிறது. மகர ராசிக்காரர்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கடனாக பணத்தை கொடுத்து விட்டு ஏமாந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வராத பணம் வீடு தேடி வரும்  நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் தேடி வரப்போகிறது. 3ஆம் வீட்டில் 6 கிரகங்கள் இணையப்போவதால் இளைய சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved