- Home
- Astrology
- ஜனவரி 20 சத்தமில்லாமல் நடந்த சனி பெயர்ச்சி.! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு ஆப்பு? ராசிபலன்கள்.!
ஜனவரி 20 சத்தமில்லாமல் நடந்த சனி பெயர்ச்சி.! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு ஆப்பு? ராசிபலன்கள்.!
Sani Peyarchi 2026: ஜனவரி 20, 2026 அன்று சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும், சிலருக்கு பாதகமான பலன்களையும் அளிக்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சனி பகவான் நட்சத்திரப் பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். ஆனால், அதற்குள்ளாகவே அவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நட்சத்திரத்திலிருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு இடம் பெயர்கிறார்.
ஜனவரி 20, 2026 மதியம் 12:13 மணிக்கு சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தற்குள் நுழைய இருக்கிறார். 2026-ஆம் ஆண்டில் நடக்கும் இந்த முதல் சனி பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மையையும், மூன்று ராசிகளுக்கு கஷ்ட காலத்தையும் வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரியின் பிற்பகுதி மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக அமையும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து நிரந்தர விடுதலைப் பெறுவீர்கள். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து மன அமைதி உண்டாகும். பொருள், நகை உள்ளிட்ட சொத்துக்களின் சேர்க்கை நடைபெறும். செலவுகள் குறையும். மூதாதையர் சொத்துக்கள் மூலம் நன்மை கிடைக்கும்.
கடகம்
சனி பகவானின் நட்சத்திர மாற்ற கடக ராசிக்காரர்களுக்கு புதிய உத்வேகத்தைத் தரும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். குறிப்பாக அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நீண்ட காலம் நிலவி வந்த உடல்நல குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்களின் கௌரவம் மற்றும் சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வெளிநாடு முயற்சிகள் கைகூடும். சுயமாக தொழில் செய்து வருபவர்கள் அதை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் அதிகபட்ச பலன்களை அனுபவிக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும். புதிய வேலை அல்லது வணிக வாய்ப்புகள் உருவாகும். பண பிரச்சனைகள் குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். எதிர்பாராத பண வரவு மற்றும் தனயோகம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தியை கேட்பீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள் இறுதியாகும்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
மேஷம்
சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். பணியிடத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் எழலாம். எந்த ஒரு முயற்சியை தொடங்குவதற்கு முன்னரும் நன்கு ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.
சிம்மம்
சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய சவால்களை கொடுக்கும். நிதி ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எடுக்கும் காரியங்களை முடிக்க முடியாமல் போகலாம் அல்லது தாமதங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். ஆரோக்கிய விஷயத்திலும் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம்.
தனுசு
ஜனவரி 20 முதல் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். திடீர் செலவுகள் அல்லது மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில் செய்து வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முதலீட்டையும் செய்வதற்கு முன்னரும் அவசரப்படக்கூடாது. நிதி சார்ந்த இழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

