MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Shani Asta: சனி பகவானுக்கு அதிர்ச்சி கொடுத்த சூரிய பகவான்.! 4 ராசிகள் வாழ்வில் செம்ம அடி விழப்போகுது.! உங்க ராசி இருக்கா?

Shani Asta: சனி பகவானுக்கு அதிர்ச்சி கொடுத்த சூரிய பகவான்.! 4 ராசிகள் வாழ்வில் செம்ம அடி விழப்போகுது.! உங்க ராசி இருக்கா?

சனி அஸ்தமனம் 2026: சனி பகவான் மார்ச் 13, 2026 அன்று மீன ராசியில் அஸ்தமனம் ஆகிறார். ஏப்ரல் 22 வரை சனி அஸ்தமன நிலையில் இருப்பார். இந்த காலகட்டம் நான்கு ராசிக்காரர்களுக்கு அசுபமாக கருதப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 06 2026, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சனி அஸ்தமனம் 2026
Image Credit : Asianet News

சனி அஸ்தமனம் 2026

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது அவர் 'அஸ்தமனம்' அடையும் காலமும் ஆகும். சூரியனுக்கு மிக அருகில் ஒரு கிரகம் வரும்போது தனது சக்தியை இழக்கும் நிலையை 'அஸ்தமனம்' என்கிறோம். நீதி தேவன் சனி பகவான் மார்ச் 13-ல் மீன ராசியில் அஸ்தமனம் ஆகிறார். ஏப்ரல் 22 வரை அஸ்தமன நிலை தொடரும். இது 4 ராசிகளின் நிதி, ஆரோக்கியம், தொழில் வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசியின் 12-ம் வீடான மீனத்தில் அஸ்தமிப்பது உங்களுக்கு அலைச்சலைத் தரும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவசர முடிவுகள் நிதி இழப்பை ஏற்படுத்தும். அடுத்த சில மாதங்களுக்கு யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற மருத்துவச் செலவுகள் அல்லது சுப விரயங்கள் ஏற்படலாம்.

Related Articles

Related image1
பிப்ரவரியில் உருவான மகா பாக்ய யோகம்.! 6 ராசிகளுக்கு அடுத்தடுத்து கிடைக்கப்போகும் அதிர்ஷ்டம்.!
Related image2
கும்பத்தில் நடக்கும் சிறப்பு சேர்க்கை: லட்சுமி கடாக்‌ஷம் பெறப்போகும் 3 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
35
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

துலாம் ராசிக்கு சனி யோககாரகன் என்றாலும், அவர் 6-ம் வீட்டில் அஸ்தமிப்பது சில சவால்களை உருவாக்கும். மறைமுக எதிர்ப்புகள் உருவாகலாம். கடன் வாங்குவதைத் தள்ளிப்போடுவது உசிதம். பழைய நோய்கள் மீண்டும் தலைதூக்கலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பழிகளில் இருந்து உங்களைக் காக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கோபம், வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

45
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5-ம் வீட்டில் சனி அஸ்தமிப்பது மன உளைச்சலைத் தரக்கூடும். பணம் சம்பந்தமாக பெரிய தகராறுகள் ஏற்படலாம். சொத்து பிரச்சனைகள் குடும்பத்தில் பிளவுகளை உண்டாக்கும். கோபம் மற்றும் அகந்தையைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் படிப்பு அல்லது ஆரோக்கியம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். முடிவுகளை எடுப்பதில் ஒருவித குழப்பம் நீடிக்கும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது.

55
மகரம்
Image Credit : Pinterest

மகரம்

மகர ராசிக்கு சனி ராசிநாதன் ஆவார். ராசிநாதனே அஸ்தமனம் அடைவது உங்களுக்கு ஒருவித சோர்வைத் தரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தள்ளிப்போகலாம் அல்லது கடைசி நேரத்தில் தடைபடலாம். செலவுகள் அதிகரிக்கும். முதலீடுகள் நஷ்டமாக மாறலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அழுத்தம் மற்றும் சோர்வை உணரலாம். கோபத்தில் முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். ஒருவித பயம் அல்லது தாழ்வு மனப்பான்மை தோன்றும். ஏழரை சனியின் கடைசி கட்டம் என்பதால் பொறுமை மிக அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
சனிப்பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிப்ரவரியில் உருவான மகா பாக்ய யோகம்.! 6 ராசிகளுக்கு அடுத்தடுத்து கிடைக்கப்போகும் அதிர்ஷ்டம்.!
Recommended image2
கும்பத்தில் நடக்கும் சிறப்பு சேர்க்கை: லட்சுமி கடாக்‌ஷம் பெறப்போகும் 3 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
கும்ப ராசி பிப்ரவரி 2026: சோதனைகளை வென்று சாதனை படைக்கப்போகும் கும்பம்!
Related Stories
Recommended image1
பிப்ரவரியில் உருவான மகா பாக்ய யோகம்.! 6 ராசிகளுக்கு அடுத்தடுத்து கிடைக்கப்போகும் அதிர்ஷ்டம்.!
Recommended image2
கும்பத்தில் நடக்கும் சிறப்பு சேர்க்கை: லட்சுமி கடாக்‌ஷம் பெறப்போகும் 3 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved