- Home
- Astrology
- பிப்ரவரியில் உருவான மகா பாக்ய யோகம்.! 6 ராசிகளுக்கு அடுத்தடுத்து கிடைக்கப்போகும் அதிர்ஷ்டம்.!
பிப்ரவரியில் உருவான மகா பாக்ய யோகம்.! 6 ராசிகளுக்கு அடுத்தடுத்து கிடைக்கப்போகும் அதிர்ஷ்டம்.!
Maha Bhagya Yoga in Tamil: செவ்வாய் மற்றும் சந்திரன் கிரகங்களின் சுற்றுப்பாதையில் ஒன்றுக்கொன்று 1, 4, 7 மற்றும் 10 ஆம் வீடுகளில் இருக்கும்போது, சந்திர மங்கள யோகம் அல்லது மகா பாக்ய யோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், இந்த மகா பாக்ய யோகம் செவ்வாய் ராசிக்காரர்களுக்கு முழுமையான பலன்களைத் தரும். பழைய முதலீடுகள் மூலம் பணவரவு உண்டாகும். திடீர் பண ஆதாயத்திற்கு வாய்ப்புள்ளது. பங்குகள் லாபம் தரும். வங்கி இருப்பு கணிசமாக உயரும். இதுவரை சந்தித்து வந்த நிதி சிக்கல்களிலிருந்து முழுமையாக விடுதலை பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கடகம்
கடக ராசியின் நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால், வருமனாம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை நிகழும். பொன், பொருள், ஆபரணங்கள் சேரும். உடன்பிறப்புகளுடன் சொத்துத் தகராறு தீர்ந்து செல்வம் பெருகும். பங்குகளில் முதலீடு லாபம் தரும். வருமானம் பல வழிகளில் உயரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு 4 ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால், துலாம் ராசிக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும். சிறிய முயற்சிகள் கூட பெரிய அளவில் நன்மை கிடைக்கும். இதன் காரணமாக சொத்து, நிலம், வீடு, வாகன யோகம் உண்டாகும். வங்கி இருப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில் நிதி சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 11 ஆம் வீடான லாப வீட்டில் சந்திர-மங்கள யோகம் உருவாவதால், வருமானம் பல வழிகளில் உயரும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு செல்வம் பெருகும். சொத்துத் தகராறுகள் சாதகமாக முடியும். விற்க முடியாமல் இருந்து வந்த சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். பங்குகள் நல்ல லாபம் தரும். அசையா சொத்துக்கள், நிலம் அல்லது மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு தன ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால், பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். திட்டமிட்டு முதலீடு செய்வார்கள். மதிப்புமிக்க பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் புதிய உத்திகளை கையாண்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் உதவி அல்லது பண உதவிகள் கிடைக்கலாம்.
மகரம்
மகர ராசிக்கு 10 ஆம் வீட்டில் சந்திரன் இருப்பதால், நிலம் தொடர்பான தொழில், ரியல் எஸ்டேட் மூலம் சொத்து மதிப்பு உயரும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். தொழில், பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. எதிர்பாராத பண வரவு இருக்கும். மூத்த சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். இதுவரை இருந்த கடன்கள் அடையத் தொடங்கும். கலைத்துறை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்குப் புகழும் பணமும் வந்து சேரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

