- Home
- Astrology
- ஒரே நேரத்தில் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு பிளாஸ்ட்டு பிளாஸ்டு தான்.! தரமான சம்பவம் லோடிங்.!
ஒரே நேரத்தில் ராகு கேது பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு பிளாஸ்ட்டு பிளாஸ்டு தான்.! தரமான சம்பவம் லோடிங்.!
Rahu Ketu Peyarchi 2026: விரைவில் ராகு-கேது ஒரே நாளில் தங்கள் நிலைகளை மாற்றப் போகின்றன. இதனால் 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

Rahu Ketu Peyarchi 2026
ஜோதிடத்தின்படி ராகு-கேது அசுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினிம் அவை பல நேரங்களில் சுப பலன்களைத் தருகின்றன. விரைவில் ராகுவும் கேதுவும் தங்கள் பயணத்தை மாற்றப் போகின்றன. மார்ச் 29 அன்று கேது மகம் நட்சத்திரத்திலும், ராகு சதய நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் நான்கு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
மேஷம்
ராகு-கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் உண்டாகும். செலவுகள் குறையும். உங்கள் பேச்சு அனைவரையும் கவரும். பயணங்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வேலையிடத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
மிதுனம்
ராகு கேதுவின் பெயர்ச்சியால் ராசிக்காரர்களின் நிதி நிலைமை உயரும். சொத்து வாங்க அல்லது விற்க இது சாதகமான நேரமாகும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக அமையும். தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும். எதிரிகளை எளிதாக வெல்வீர்கள். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். சேமிப்பு மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். காதல் உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி காரணமாக செல்வம் பெருகும். எளிதாக பணம் சம்பாதிப்பீர்கள். கடன் மற்றும் கஷ்டங்கள் குறையும். செலவுகள் குறைவதால் வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

