- Home
- Astrology
- சந்திர கிரகணம் 2026: கர்ப்பிணிகள் மறந்தும் இந்தத் தவறுகளைச் செய்யக்கூடாது.! மீறினால் ஆபத்து உங்களுக்குத்தான்.!
சந்திர கிரகணம் 2026: கர்ப்பிணிகள் மறந்தும் இந்தத் தவறுகளைச் செய்யக்கூடாது.! மீறினால் ஆபத்து உங்களுக்குத்தான்.!
Eclipse Precautions for Pregnant Women : இந்த ஆண்டு ஹோலி பண்டிகையன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த காலக்கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.

Eclipse Precautions for Pregnant Women
2026-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3-ஆம் தேதி நிகழ உள்ளது. இந்தியாவில் இது பகுதியாகத் தெரியும் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின்படி, கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. வீட்டிற்குள் இருப்பது பாதுகாப்பானது மற்றும் மங்களகரமானது என்ற நம்பிக்கை உள்ளது. அமைதியான சூழலில் இருப்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நன்மை பயக்கும்.
மந்திரங்கள் உச்சரிப்பது கேட்பது நல்லது
கிரகணத்தின் போது கடவுளின் பெயரை உச்சரிப்பது நல்லது. 'ஓம் நம சிவாய' அல்லது காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது என்று கருதப்படுகிறது. படிக்க இயலாதவர்கள் இது போன்ற மந்திரங்களை கேட்பது சிறப்பு.
வயிற்றில் திருநீறு பூசுதல் வேண்டும்
கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் தங்கள் வயிற்றில் திருநீறு பூச வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இது கருவைப் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இதைச் செய்வதால் நிச்சயமாக எந்த ஆபத்தும் இல்லை. கிரகணத்தால் ஏற்படும் தோஷங்களை இது குறைக்கும் என நம்பப்படுகிறது. கிரகண கதிர்கள் கருவை பாதிக்கும் என்பதால் ஜன்னல், கதவுகளை மூடிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கூர்மையான பொருட்கள்
கிரகணத்தின் போது கத்தி, கத்தரிக்கோல் அல்லது ஊசி போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. திறந்த வெளியில் நின்று கிரகணத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. கிரகணத்தின் போது தூங்குவதைத் தவிர்த்து, இறை வழிபாடு அல்லது தியானம் செய்வது நல்லது என்று கருதப்படுகிறது.
தர்ப்பை புல்
சூதக காலத்தில் சமைப்பதையும், உணவு உண்பதையும் தவிர்க்கும் வழக்கம் உள்ளது. பலர் கிரகணத்திற்கு முன் தங்கள் உணவில் துளசி இலைகள் மற்றும் தர்ப்பை புல்லைச் சேர்க்கிறார்கள். இது உணவு விஷமாக மாறுவதை தவிர்க்க உதவுகிறது. கிரகண நேரத்தில் சமைப்பதையோ அல்லது சாப்பிடுவதையோ தவிர்க்கச் சொல்வார்கள். உணவில் தர்பைப் புல் அல்லது துளசி இலைகளைப் போட்டு வைப்பது வழக்கம்.
கோயில் வழிபாடு
கிரகணம் முடிந்த பிறகு குளித்து விட்டு, கோயிலுக்குச் செல்வது நல்லது. கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி கடவுளை வணங்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். அமைதியாக அமர்ந்து புத்தகங்கள் படிக்கலாம் அல்லது மெல்லிசை கேட்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

