- Home
- Astrology
- Birth Month : சுய ஒழுக்கத்துல இவங்கள அடிச்சிக்கவே முடியாது.. நீங்க பிறந்த மாசம் இருக்கா?
Birth Month : சுய ஒழுக்கத்துல இவங்கள அடிச்சிக்கவே முடியாது.. நீங்க பிறந்த மாசம் இருக்கா?
ஜோதிடத்தின் படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் சுய ஒழுக்கத்துல பெஸ்டாக இருப்பார்களாம். அது எந்தெந்த மாதம் என்று இங்கு பார்க்கலாம்.

Birth Month and Discipline
சுய ஒழுக்கம் நம் அனைவரிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் இயற்கையாகவே அதிக சுய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பார்களாம். ஆம், ஜோதிட சாஸ்திரத்தின் படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் அதிக சுய ஒழுக்கம் கொண்டவர்களாக இருப்பார்களாம். உடை, வாழ்க்கைமுறை என எல்லா விஷயத்திலும் இவர்கள் சுய ஒழுக்கத்தை அதிகமாக கடைபிடிப்பார்களாம். சொல்லப்போனால், இவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வார்கள். எனவே எந்த மாதங்களில் பிறந்தவர்கள் அதிக சுய ஒழுக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி :
ஜோதிடத்தின்படி ஜனவரி மாதம் பிறந்தவர்கள் தான் சுய ஒழுக்கத்தில் நம்பர் ஒன். அர்ப்பணிப்பு, உறுதியில் இவர்களை மிஞ்சி யாரும் இல்லை. எல்லா விஷயத்திலும் திட்டமிட்டு செயல்படுவார்கள். இலக்குகளை அடைய வேண்டும் என்பதை இவர்களது நோக்கம். இவர்களுக்கு வெற்றியை விட நற்பெயர் தான் ரொம்பவே முக்கியம். எனவே தவறான பாதையில் ஒருபோதும் இவர்கள் செல்லவே மாட்டார்கள்.
மார்ச் :
ஜோதிடத்தின்படி, மார்ச் மாதம் பிறந்தவர்களும் சுய ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் புத்திசாலி மற்றும் படைப்பாற்ற மிக்கவர்கள். சுய ஒழுக்கம் இல்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது என்பதை இவர்களது எண்ணம். இதனாலே எல்லா விஷயத்திலும் ரொம்ப சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள்.
ஜூன் :
ஜோதிடத்தின்படி, ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் சுயம் ஒழுக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். சரியான பாதையில் செல்ல இவர்கள் பகுத்தறிவு சிந்தனையில் அதிகமாக ஈடுபடுவார்கள். தவறான பாதை வெற்றியை பாதிக்கும் என்பதை இவர்கள் அறிவதால் அதிக சுய கட்டுப்பாடுடன் இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற சுய ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை இவர்கள் உணர்வதால் தவறை ஒருபோதும் செய்யவே மாட்டார்கள்.
நவம்பர் :
ஜோதிடத்தின் படி நவம்பர் மாதம் பிறந்தவர்கள் அதிக ஒழுக்கம் உள்ளவர்கள். இவர்கள் தங்களுக்கு தோல்வியில் ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்த்துவிடுவார்கள். ஏனெனில் சுய ஒழுக்கம் இல்லையென்றால், வெற்றியை அடைய முடியாது என்பது இவர்களது புரிதல்.