- Home
- Astrology
- Birth Month : இந்த 3 மாசத்துல பிறந்தவங்க கிட்ட வம்பு வைச்சுக்காதீங்க; ஒருநாளும் மன்னிக்கவே மாட்டாங்க!
Birth Month : இந்த 3 மாசத்துல பிறந்தவங்க கிட்ட வம்பு வைச்சுக்காதீங்க; ஒருநாளும் மன்னிக்கவே மாட்டாங்க!
ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களிடம் மன்னிக்கும் குணமே இருக்காதாம். அது எந்தெந்த மாதம் என்று இங்கு காணலாம்.

Birth Month
ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த ராசி மற்றும் மாதத்தை வைத்து அவரது ஆளுமை, குணநலன்களை சொல்லிவிடலாம். அந்தவகையில் சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களிடம் மன்னிக்கும் குணம் துளியும் இருக்கவே இருக்காது என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த துரோகத்திற்கு நிச்சயமாக பழிவாங்குவார்களாம். சொல்லப்போனால் இவர்கள் ரொம்பவே ஆபத்தானவர்கள் என்கிறது ஜோதிடம். அது எந்தெந்த மாதம் என்று இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஜனவரி :
ஜோதிடத்தின் படி, ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களிடம் மன்னிக்கும் குணம் அறவே இருக்காதாம். இவர்கள் பிறரின் தவறை மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள். அதற்காக பழிவாங்குவார்கள். சொல்லப்போனால் இரண்டாவது வாய்ப்பை ஒருபோதும் கொடுக்கவே மாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களிடம் நம்பிக்கை இருந்தால் அதை பெறுவது சாத்தியமற்றது என்கிறது ஜோதிடம்.
ஆகஸ்ட் :
ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களிடம் மன்னிக்கும் குணம் துளியும் இல்லை. இவர்கள் பிறரது உரையாடல் மற்றும் காரணங்களை கேட்க ஒருபோதும் தயாராக இருக்கவே மாட்டார்கள். ரொம்பவே ஆக்ரோஷமானவர்களாக இருப்பார்களாம்.
அக்டோபர் :
ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். பாம்பு போல பழிவாங்கும் குணம் உடையவர்கள். வருடங்கள் ஆனாலும் பழிவாங்க திட்டமிடுவார்கள். இவர்கள் ரொம்பவே உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் விசுவாசமானவர்கள் என்பதால் நேசிப்பவர்கள் துரோகம் செய்தால் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்களை யாராவது ஏமாற்றினால் அல்லது துரோகம் செய்தால் அவர்களை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். அதற்காக பழி வாங்குவார்கள்.