- Home
- Astrology
- Birth Date: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்ப ஆபத்தானவர்களாம்.! இவங்ககிட்ட கவனமா இருங்க.!
Birth Date: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்ப ஆபத்தானவர்களாம்.! இவங்ககிட்ட கவனமா இருங்க.!
எண் கணிதத்தின்படி சில தேதிகளில் பிறந்தவர்கள் ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே அனைவருடனும் நட்பு கொள்வார்களாம். அந்த தேதிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

birth date
நம்மைச் சுற்றி பல வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. சிலர் மற்றவர்களுக்கு உண்மையிலேயே உதவும் குணம் கொண்டவர்கள். சிலர் நல்லவர்கள் போல் நடித்து பிறரை ஏமாற்றப்படுகின்றனர். தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே பிறருடன் நட்பு கொள்கின்றனர். இவர்களுக்கு கோபம் வந்தால் பிறரை காயம் செய்வதற்கு தயங்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இது போன்ற குணாதிசயங்கள் சில தேதிகளில் பிறந்தவர்களிடம் உள்ளதாக கூறப்படுகிறது. எண் கணிதத்தின்படி அந்த தேதிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 1
ஒவ்வொரு மாதத்திலும் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 1 ஆகும். இவர்களை ஆளும் கடவுள் சூரியன். சூரியன் உற்சாகம், தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றின் கடவுளாவார். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு கோபம் அதிகமாக வரும். இவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்கிற மனநிலையில் இருப்பார்கள். தான் ஒரு விஷயத்தை கூறிவிட்டால் அதை திரும்ப பெற மாட்டார்கள். ஒரு முடிவை எடுத்து விட்டால் அதற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். மற்றவர்கள் கஷ்டப்படுபவர்களே என்கிற எண்ணம் அவர்களிடம் இருக்காது. பிறரை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் மற்றவர்களை காயப்படுத்துவார்கள். கோபத்தில் இவர்கள் என்ன செய்வார்கள் என்பது இவர்களுக்கே தெரியாது.
எண் 4
ஒவ்வொரு மாதத்திலும் 4,13,22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் நான்கின் கீழ் வருகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மீது ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகுவை பாவ கிரகம் என்று அழைக்கிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் மிகவும் அதிகம். இந்த எண்ணுக்கு சொந்தமானவர்கள் எப்போதும் தங்கள் நலனை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். இவர்களுக்கு சுயநலம் மிகவும் அதிகம். இவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் மற்றவர்களை வேலை வாங்குவார்கள். தங்கள் நண்பர்களிடமிருந்து பயன் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் பதிலுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். தங்கள் தேவைக்காக மட்டுமே பழகும் குணம் கொண்டவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள். எனவே இவர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும்.
எண் 7
ஒவ்வொரு மாதத்திலும் 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7ன் கீழ் வருகிறார்கள். ஏழு என்ற எண் கேது கிரகத்துடன் தொடர்புடையது. இவர்கள் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு, வெளியே வேறு விஷயம் பேசுவார்கள். இவர்கள் மனதில் உள்ளதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. கேது மாயையுடன் தொடர்புடைய கிரகம் என்பதால் இவர்களுக்கு இந்த குணாதிசியங்கள் நிறைந்துள்ளது. இவர்களிடம் ரகசியங்கள் நிறைய இருக்கும். இந்த எண்களில் பிறந்தவர்களுடன் சண்டை போடாமல் இருப்பதே நல்லது. இவர்கள் யாரையாவது எதிரியாக கருதி விட்டால் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். பழிவாங்கும் குணமும் இவர்களிடம் அதிகம். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
எண் 9
ஒவ்வொரு மாதத்திலும் 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 9ன் கீழ் வருகிறார்கள். இந்த எண்ணின் அதிபதி செவ்வாய். ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இல்லை என்றால் உங்களுக்கு கோபம் அதிகமாக வரும். செவ்வாய் போர் கிரகமாக அறியப்படுகிறார். இந்த தேதிகளில் பிறந்தவர்களை செவ்வாய் கிரகம் ஆள்வதால் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தங்கள் சுயநலனை பற்றியே அவர்கள் சிந்திப்பார்கள். இவர்கள் அடிக்கடி மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவார்கள். தங்கள் சுயநலத்திற்காக எதிரிகளை கூட நண்பர்களாகவும் மாற்றுவார்கள்.
(குறிப்பு: இந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட கருத்துக்கள் அடிப்படையிலானவை மட்டுமே. இதன் நம்பகத் தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இந்த ஜோதிட தகவல்களை ஒரு பொது வழிகாட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். ஒருவர் வளர்ந்த சூழல், சந்தித்த அனுபவங்கள் மற்றும் பிற காரணிகளே அவர்களை சுயநலவாதிகளாகவோ அல்லது ஆபத்தானவர்களாகவோ மாற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்)