- Home
- Astrology
- முதலாளி ஆவதற்காகவே பிறந்த 4 ராசிகள் யார் தெரியுமா? இவர்கள் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய மாட்டாங்க.!
முதலாளி ஆவதற்காகவே பிறந்த 4 ராசிகள் யார் தெரியுமா? இவர்கள் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய மாட்டாங்க.!
Zodiac Signs Born Leaders: சில ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு அடிமையாக வேலை செய்ய விரும்ப மாட்டார்களாம். அவர்கள் முதலாளி அல்லது தலைவர் ஆவதற்கு என்றே பிறந்தவர்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களுக்கு செவ்வாய் பகவான் துணிச்சலை அளிக்கிறார். தைரியமாக புதிய பணிகளை தொடங்குவதோடு உறுதியான முடிவுகள் மூலம் இலக்கை அடைய உழைப்பார்கள். தான் எப்போதும் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மற்றவர்களை அடக்கி ஆள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். வேலை பார்க்கும் இடத்தில் முதலாளிகள் ஏதாவது கூறிவிட்டால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெளியேறி விடுவார்கள். சொந்த காலில் நின்று உழைக்க வேண்டும் என்கிற வேட்கை கொண்டிருப்பார்கள். தங்கள் குழு உறுப்பினர்களை எப்போதும் ஊக்குவித்து கொண்டே இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பெயருக்கு ஏற்றார் போல சிங்கத்தின் தன்மையைக் கொண்டிருப்பார்கள். சிங்கம் எப்படி ஒரு குழுவை வழிநடத்திச் செல்லுமோ அதுபோல முதலாளித்துவம் இவர்களின் ரத்தத்திலேயே ஊறி இருக்கும். சூரியனின் ஆதிக்கம் காரணமாக இவர்கள் தலைமைப் பண்புடன் விளங்குவார்கள். முதலாளித்துவ மனப்பாங்கு இவர்களுக்கு பிறப்பிலிருந்தே இருக்கும். இவர்களுடைய பேச்சை மற்றவர்கள் கவர்ந்து இவர்கள் பின்னால் அணிவகுப்பார்கள். எவரையும் எளிதில் ஈர்க்கும் பேச்சாற்றல், திறமை இருப்பதால் ஒரு குழுவை எளிதில் வழி நடத்துவார்கள். இவர்களின் மன உறுதி மிக்க செயல்கள் அகங்காரம் கொண்டதாக தோன்றினாலும் உண்மையில் இவர்கள் முதலாளி ஆவதற்காகவே பிறந்தவர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தலைமைப் பண்பு கொண்டவர்களில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பேசி மற்றவர்களை எளிதாக கவர்வார்கள். இவர்கள் சொல்வதை மற்றவர்கள் விரும்பி கேட்பார்கள். அந்த அளவிற்கு பிறரை வசியம் செய்யும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தங்களுடைய சாதுரியமான பேச்சாற்றல் காரணமாக மற்றவர்களை எளிதில் எடை போடுவார்கள். இந்த திறமை தலைமைப் பண்புக்கு சான்றாகும். தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதன்படி நடப்பார்கள். மற்றவர்களுக்கு அடிபணிவதை ஒருபோதும் இவர்கள் விரும்புவதில்லை. இவர்களுக்கு ஒருவரின் கீழ் அடிமையாக வேலை பார்ப்பதில் ஆர்வம் இருக்காது. சாகசங்களை விரும்புவதால் மாற்றத்தை விரும்புவார்கள்.
மகரம்
மகர ராசி சனி பகவானின் ஆதிக்கம் கொண்டவர்கள். இவர்கள் கடின உழைப்பை கொடுப்பவர்கள். ஒழுக்கமானவர்கள். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர்கள். இவர்களுக்கு இயல்பாகவே தான் முதலாளி என்கிற நினைப்பு இருக்கும். தங்கள் மேல் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். மற்றவர்களை விட தங்களை தானே அதிகமாக நம்புவார்கள். தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கும் இவர்கள் தொட்டதெல்லாம் வெற்றியிலேயே முடியும். எதையும் பகுத்தறியும் குணாதிசயம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். இவர்கள் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும் என்று மற்றவர்களும் நம்புவார்கள். எனவே மகர ராசிக்காரர்களின் இயல்பிலேயே மற்றவர்களை வழிநடத்தும் தலைமைத்துவத்துடன் விளங்குவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

