- Home
- Astrology
- Birth Date : இந்த 4 தேதில பிறந்தவங்க வீக்னஸ் இதுதான்! இவங்க கூட மோதுனா ஈஸியா ஜெயிக்கலாம்
Birth Date : இந்த 4 தேதில பிறந்தவங்க வீக்னஸ் இதுதான்! இவங்க கூட மோதுனா ஈஸியா ஜெயிக்கலாம்
எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 2 கொண்டவர்களின் பலவீனங்கள். அதனால் அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து இங்கு காணலாம்.

Weakness of Radix Number 2
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் 2 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் தனித்துவமான குணாதிசயங்கள், பண்புகள், திறமைகள் மற்றும் தங்களுக்குரிய தனித்துவமான பழக்கவழக்கங்களை கொண்டுள்ளன. அதேசமயம் இவர்களிடம் இருக்கும் சில பலவீனங்களால் பல சிரமங்களை சந்திப்பார்கள் என்று எண் கணிதம் சொல்லுகின்றது. இந்த பதிவில் ரேடிக்ஸ் எண் 2 உடையவர்களின் பலவீனங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விரைவில் சலிப்படைவர் :
எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 2 கொண்டவர்கள் எந்தவொரு விஷயத்தின் மீதும் நீண்ட நாட்கள் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். அதாவது அந்த விஷயத்தில் தங்களது ஆசைகள் நிறைவேறியவுடன் அதன் மீது இருக்கும் ஈடுபாட்டை குறைத்து கொள்வர். இந்த பழக்கத்தால் இவர்கள் எந்தவொரு வேலையிலும் நீண்ட நாட்கள் இருக்க முடியாது. சில நாட்களிலே அதிலிருந்து வெளியே வந்து விடுவார்கள். அதுபோல காதலிலும் இவர்களுக்கு நாட்டம் கம்மியாகவே இருக்கும்.
அதிகம் சிந்திப்பர் :
எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 2 கொண்டவர்கள் இயல்பாகவே அதிகமாக சிந்திக்க கூடியவர்கள். எந்த ஒரு விஷயத்திலும் முடிவில் சீக்கிரமாக எடுக்க மாட்டார்கள். கடைசி நிமிஷம் வரை யோசித்துக் கொண்டு இருப்பார்கள். அதாவது இவர்கள் தினசரி விஷயத்திற்கு கூட ஆழமாக சிந்திப்பார்களாம். இந்த பழக்கத்தால் சுற்றி இருப்பவர்களை இவர்கள் சந்தனப்படுத்துவார்கள்.
முன்கோபம் :
எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 2 கொண்டவர்கள் ரொம்பவே முன்கோபக்காரராக இருப்பார்களாம். பிரச்சனை வந்தால் அவர்களது வாயை விட கை தான் அதிகமாக பேசுமாம். இல்லையெனில் கடும் வார்த்தைகளை பயன்படுத்தி தாக்குவார்கள். இந்த எண்களில் பிறந்தவர்களை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
பிறருக்கு உதவுதல்!
எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 2 கொண்டவர்கள் தங்களது தனிப்பட்ட வேலையை விட, பிறருக்கு உதவி செய்வதில் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்களாம். எந்த அளவிற்கு எனில் தங்களது வேலையை கூட புறக்கணித்து பிறரது தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இருப்பார்களாம். அந்த அளவிற்கு இவர்கள் இளகிய மனம் உடையவர்கள். இந்த குணத்தால் பலரும் இவர்களை தங்களது தேவைக்கு தவறாக பயன்படுத்திக் கொள்வர்.
தன்னம்பிக்கை கம்மி!
எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 2 கொண்டவர்கள் இயற்கையாகவே தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்கள். ஆனால் பிறர் மத்தியில் தன்னம்பிக்கை இருப்பதாக நடிப்பார்கள். இதனால் எந்த காரியங்களை செய்தாலும் நண்பர்களுடன் சேர்ந்து செய்வார்கள். திருமணத்திற்கு பிறகு துணையின் உதவியுடன் காலத்தை கடத்துவார். தனக்கு தன்னம்பிக்கை இல்லையே என்று தனிமையில் இருக்கும்போது வருந்துவார்கள் என்கிறது எண் கணிதம்.
மன அழுத்தம் :
எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 2 கொண்டவர்களிடம் மன அழுத்தம் மற்றும் மனக்கவலை அதிகமாகவே இருக்கும். சிறிய பிரச்சனை எதிர்கொள்ள கூட இவர்களுக்கு வலிமை இருக்காது. உடனே அழுது விடுவார்கள். சுருக்கமாக சொன்னால் இவர்களும் இளகிய மனது கொண்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவததையும் சோகத்தில் கடத்துவார்.