- Home
- Astrology
- Birth Date : இந்த 4 தேதில பிறந்த ஆண்கள் ரொம்ப தங்கமானவங்க! இவங்கள திருமணம் செஞ்சா சண்டையே வராது
Birth Date : இந்த 4 தேதில பிறந்த ஆண்கள் ரொம்ப தங்கமானவங்க! இவங்கள திருமணம் செஞ்சா சண்டையே வராது
எண் கணிதத்தின் படி சில குறிப்பிட்ட தேதியில் பிறந்த ஆண்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அது எந்தெந்த தேதி என்று இந்த பதிவில் காணலாம்.

Birth Date
எண் கணிதம் என்பது ஒருவர் பிறந்த தேதி அடிப்படையில் அவரது குணாதிசயங்கள் பண்பு நலன்கள் மற்றும் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் என்று எண் கணித நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த ஆண்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எண் கணிதம் கூறுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சண்டை சச்சரவை விரும்ப மாட்டார்கள். மகிழ்ச்சியான மன வாழ்க்கையை வாழ விரும்புவார்களாம். இப்படி கருணை உள்ளம் கொண்ட ஆண்கள் எந்தெந்த தேதியில் பிறந்திருக்கிறார்கள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
9 ஆம் தேதி :
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 9ம் தேதியில் பிறந்தவர்கள் தங்களது உணர்வுக்கு மதிப்பு அளிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுபோல தான் மற்றவர் விருப்பத்திற்கும் மதிப்பு அளிப்பார்கள். இவர்கள் தங்களது திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை சாதுரியமாக சமாளித்து விடுவார்கள். குறிப்பாக சண்டை சச்சரவு இல்லாத மன வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.
15 ஆம் தேதி :
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 15ம் தேதியில் பிறந்தவர்கள் இன் முகத்துடன் மற்றவர்களை வரவேற்பார்கள். இக்கட்டான சூழ்நிலையில் கூட முகத்தில் சிரிப்பு இருக்கும். இந்த தேதியில் பிறந்தவர்களிடம் கோபம் அரிதாகவே வரும். அதிலும் குறிப்பாக குடும்பத்தார் மீது கோபப்படவே மாட்டார்கள். தன்னை சார்ந்து இருப்பவர்களிடம் எப்போதுமே இவர்கள் கனிவாக தான் நடந்து கொள்வார்கள். எவ்வளவு பெரிய கஷ்டமான சூழ்நிலையில் கூட பொறுமை மற்றும் நிதானத்தை கையாள்வார்கள். முக்கியமாக, திருமணம் செய்த பெண்ணின் மனதை நிறைவாக வைக்க விரும்புவார்கள்.
18 ஆம் தேதி :
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 18ம் தேதியில் பிறந்தவர்கள் தங்களது கனவுகளின் நிஜ வாழ்க்கையில் கொண்டு வர கடுமையாக போராடுவார்கள். இவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவார்கள். பிறரது பிரச்சினைகளில் தலையிட விரும்ப மாட்டார்கள். அதே சமயம் மன வாழ்கையில் தங்களது துணையை இன்முகத்துடன் வைத்துக் கொள்வார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தால் கூட அதை சுலபமாக கையாள்வார்கள்.
27ஆம் தேதி
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 27ம் தேதியில் பிறந்தவர்கள் கருணை உள்ளத்திற்கு பெயர் பெற்றவர்கள். பிறர் மீது கோபத்தை எப்படி காட்டுவது என்று இவர்களுக்கு தெரியாது ஒருவேளை கோபம் வந்தாலும் உடனே மறந்து நட்பாக பழகுவார்கள். குறிப்பாக இவர்கள் தங்களது வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். தன்னை சுற்றியுள்ளவர்களை எப்போதுமே மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்பதுதான் இவர்களது விருப்பம்.
மேலே சொல்லப்பட்ட இந்த 4 செய்திகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் திருமண வாழ்க்கையானது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண் கணித நிபுணர்கள் சொல்லுகின்றனர்.