- Home
- Astrology
- Birth Date : இந்த 5 தேதில பிறந்தவங்கள எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குமாம்.. உங்க பிறந்த தேதி இதுவா?
Birth Date : இந்த 5 தேதில பிறந்தவங்கள எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குமாம்.. உங்க பிறந்த தேதி இதுவா?
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் பிறரால் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகின்றது. அது எந்தெந்த தேதிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Numerology Lucky Birth Dates
எண் கணிதம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது குணநலன்கள், ஆளுமை மற்றும் எதிர்கால வாழ்க்கையை கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே பிறரை ஈர்க்கும் திறனை கொண்டிருப்பார்கள் என்று எண் கணிதம் கூறுகிறது. அது எந்தெந்த தேதிகள். நீங்கள் பிறந்த தேதி அதில் இருக்கிறதா? என்பதை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எண் 1
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1 இன் கீழ் வருவார்கள். இவர்கள் ரொம்பவே அர்ப்பணிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதால் இவர்கள் பிறரால் அதிகமாக நேசிக்கப்படுகிறார்கள்.
எண் 3
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் எண் 3 இன் கீழ் வருவார்கள். இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக திகழ்வார்கள். இயற்கையாகவே இவர்களிடம் நல்ல குணம் இருப்பதால் பிறருடன் எளிதாக பழகுவார்கள். இதனால் இவர்களை பிறர் அதிகமாக நேசிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் புத்திசாலித்தனத்தால் பிறரது கடினமானதை கூட இலகுவாக்கி விடுவார்கள். இவர்கள் எப்போதுமே பொழுதுபோக்கை விரும்புவார்கள்.
எண் 5
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5 இன் கீழ் வருவார்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே தைரியசாலியாக இருப்பார்கள் என்று எண் கணிதம் கூறுகிறது. இவர்கள் புதுமையை அதிகமாக விரும்புவார்களாம். இவர்களிடம் இருக்கும் நகைச்சுவை, வேடிக்கை மற்றும் குறும்புத்தனமான செயலால் பிறரால் ஈர்க்கப்படுகிறார்கள்.
எண் 7
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 7, 16 மற்றும் 25 இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7 இன் கீழ் வருவார்கள். இவர்களிடம் எதையும் சவாலுடன் பார்க்கும் குணம் இருக்கும் என்று என் கணிதம் கூறுகிறது. இவர்களிடம் இருக்கும் விளையாட்டுத்தனமான செயலால் மற்றவர்கள் எளிதாக ஈர்க்கப்படுவார்கள்.
எண் 9
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27 இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் எண் 9 இன் கீழ் வருவார்கள். இவர்கள் ரொம்பவே அன்பானவர்கள் என்று எண் கணிதம் கூறுகிறது. இவர்களிடமும் பிறரை சிரிக்க வைக்கும் நகைச்சுவை மற்றும் குறும்புத்தனமான பண்புகள் உள்ளது. ஒரு பிரச்சினையை கூட நகைச்சுவையாக சரி செய்து விடுவார்களாம். இவர்களின் இந்த செயலால் மற்றவர்கள் அதிகமாக இவர்களை நேசிப்பார்கள் என்று எண் கணிதம் சொல்லுகின்றது.