- Home
- Astrology
- Birth Date: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு எல்லா கடவுளின் ஆசியும் இருக்கும்.! சின்ன கெட்டது கூட அவங்களுக்கு நடக்காது
Birth Date: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு எல்லா கடவுளின் ஆசியும் இருக்கும்.! சின்ன கெட்டது கூட அவங்களுக்கு நடக்காது
குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் அனைத்து கடவுள்களின் ஆசியைப் பெற்றவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடவுளின் ஆசி பெற்றவர்கள்
அனைவருக்குமே கடவுளின் ஆசி பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் கடவுளின் ஆசி கிடைப்பதில்லை குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனைத்து கடவுள்களின் ஆசி கிடைப்பதாக கூறப்படுகிறது. கடவுள்களின் ஆசியால் இவர்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுடைய லட்சியம் நிறைவேறும். அவர்கள் தங்கள் விரும்பியபடி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைப்பதாக கூறப்படுகிறது. அந்த தேதிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 3
ஒவ்வொரு மாதத்திலும் மூன்றாம் தேதியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அதிர்ஷ்ட ரேகைகளை கொண்டு விளங்குகின்றனர். இது அவர்களை தெய்வங்கள் பாதுகாக்கிறது என்பதை உணர்த்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், கவலை இல்லாமலும் வாழ்கின்றனர். கடவுளின் பரிபூரண ஆசியால் இவர்கள் மீது செலுத்தப்படும் எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் பிற தீய நோக்கங்கள் அவர்களை நெருங்குவதில்லை. மேலும் மூன்றாம் தேதி என்பது சுப கிரகமான குரு பகவானால் ஆளப்படுகிறது. இது இவர்களின் தெய்வீக பாதுகாப்பை மேலும் அதிகரிக்கிறது.
எண் 7
ஒவ்வொரு மாதத்திலும் ஏழாம் தேதியில் பிறந்தவர்களுக்கு கடவுள்களின் ஆசிர்வாதம் அதிகமாக உண்டு. ஏழு என்ற எண் அனைத்து மதத்திலும் முக்கிய எண்ணாக கருதப்படுகிறது. 7 ஆம் தேதியில் பிறந்தவர்கள் தூய்மையான எண்ணங்கள் கொண்டவர்கள். இவர்கள் தெய்வீக சக்தியுடன் விளங்குகிறார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அந்த தெய்வீக சக்தியைப் பரப்புகிறார்கள். இவர்கள் தொலைநோக்குப் பார்வை மற்றும் பிறவற்றை எளிதில் அறிந்து கொள்ளும் அசாதாரண திறன் கொண்டு விளங்குகின்றனர். தங்கள் உள் உணர்வுகள் மூலம் எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். கடவுள்களின் ஆசி இருப்பதால் அவர்கள் இத்தகைய திறன்களை பெற்று விளங்குகின்றனர்.
எண் 18
ஒவ்வொரு மாதத்திலும் 18-ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கும் தெய்வீக சக்திகள் உண்டு. இவர்கள் என் 1-ன் ஆற்றல் மற்றும் எண் 8-ன் கர்ம வினைகள் இணைந்தவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் வலுவான உள்ளுணர்வையும், ஆன்மீக விழிப்புணர்வையும் கொண்டுள்ளனர். இவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் பாதுகாப்பு எப்போதும் இருக்கிறது. தங்கள் நேர்மையான குணங்கள் மற்றும் ஆளுமையால் பிறரை வழி நடத்துகின்றனர். இவர்கள் வழி தடுமாறி செல்லும் பொழுது தெய்வங்கள் இவர்களை வழிநடத்துகின்றன. இவர்கள் கீழே விழுந்தால் தாங்கிப் பிடிக்க தெய்வத்தின் கரங்கள் துணையாக இருக்கின்றன.
எண் 30
ஒவ்வொரு மாதத்திலும் முப்பதாம் தேதியில் பிறந்தவர்கள் எண் 3-ன் அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் எண் பூஜ்ஜியத்தின் புதிய தொடக்க ஆற்றலுடன் பிணைக்கப்பட்டவர்கள். இவர்கள் இயற்கையான வசீகரத்துடனும் தூய மனதுடனும் விளங்குகின்றனர். இது இவர்களை அனைவரையும் விரும்பக் கூடியவர்களாக மாற்றுகிறது. மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தெய்வங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும் தங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தங்களின் அன்பானவர்களுக்கும் இவர்கள் தெய்வீக சக்தியை பரப்புகிறார்கள். அனைத்து கடவுள்களின் ஆசி இருப்பதால் இவர்கள் எந்த துறையிலும் வெற்றி பெறுகின்றனர்.