- Home
- Astrology
- This Week Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, அள்ளிக்கொடுக்கும் குரு பகவான்.! இந்த வாரம் அடிக்கப்போகும் யோகம்.!
This Week Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, அள்ளிக்கொடுக்கும் குரு பகவான்.! இந்த வாரம் அடிக்கப்போகும் யோகம்.!
This Week Rasi Palan: நவம்பர் 03 முதல் நவம்பர் 09 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - தனுசு
தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் சற்று கலவையான பலன்களை தரக்கூடிய வாரமாக இருக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். அவை உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களின் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வீண் போகாது. சமூகத்தில் உங்கள் நிலை உயரும். மதிப்பு கூடும். எதிர்பாராத நல்ல மாற்றங்கள் நிகழலாம். உங்கள் நீண்ட கால ஆசைகள், கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
நிதி நிலைமை:
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய கடன்கள் வாங்குவதை தவிர்க்கவும். நிதி நிலைமை சீராக இருக்கும். முதலீடுகள் குறித்து நிதானமாக முடிவு எடுக்கவும். பணப்புழக்கம் திருப்தியாக இருந்தாலும், வீண் செலவுகளை குறைப்பது அவசியம். பொருளாதார நிலைமை முன்னேறுவதற்கு புதிய வழிகள் பிறக்கும்.
கல்வி & ஆரோக்கியம்:
கல்வி பயிலும் மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். புதிய பாடங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கூடுதல் முயற்சியை எடுக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை. அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதும், ஓய்வு எடுப்பதும் அவசியம். உடல்நலப் பிரச்சனைகளுக்கு உடனடியான மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரம்:
உபயோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவைத் தரும். சக ஊழியர்களுடன் நல்லுறவை பேணுவது அவசியம். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் உங்களுக்கு எதிரான பிரச்சனையை உண்டாக்குபவர்கள் தாமாக அடங்கி விடுவார்கள். குடும்ப உறவுகளில் சாதகமான போக்கை காண்பீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். மூத்த உறுப்பினர்கள் மற்றும் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்:
இந்த வாரம் எதிர்பாராத அலைச்சல் மற்றும் மன கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், உங்கள் ராசிநாதனான குரு பகவானை வணங்குவது நல்லது. துர்க்கை அம்மன் ஆலயங்களுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வர தடைகள் நீங்கும். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது அல்லது மஞ்சள் பொருட்களை பயன்படுத்துவது நேர்மறை பலன்களை கூட்டும். வாயில்லா ஜீவன்கள், பறவைகளுக்கு உணவளியுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)