MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Name Numerology: இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பொறுமையில் பூமாதேவிகளாக இருப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

Name Numerology: இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பொறுமையில் பூமாதேவிகளாக இருப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

Name Numerology: எண் கணிதத்தின்படி, சில தேதிகளில் பிறந்த பெண்கள் பொறுமையில் பூமாதேவிகளாக விளங்குவார்களாம். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 23 2026, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Name Numerology
Image Credit : AI Generated

Name Numerology

எண் கணிதம் ஜோதிடத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. எண் கணிதத்தின் படி ஒரு பெண்ணின் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை ஆகியவை அவர் பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எண் கணிதத்தில் குறிப்பிட்ட எண்களின் ஆதிக்கத்தின் கீழ் பிறக்கும் பெண்களுக்கு இயல்பாகவே பொறுமை, அமைதியான குணம் இருக்குமாம். பொறுமையில் பூமாதேவிகளாக விளங்கும் பெண்கள் பிறந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் - Tamil Astrology: வடக்கு நோக்கி நகரும் செவ்வாய் பகவான்.! ஜூலை 25 முதல் இந்த 5 ராசிகள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வருது.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எண் 2 (பிறந்த தேதிகள் - 2, 11, 20, 29)
Image Credit : stockPhoto

எண் 2 (பிறந்த தேதிகள் - 2, 11, 20, 29)

எண் 2-ல் பிறந்தவர்கள் சந்திர பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வருபவர்கள். சந்திரன் மனதின் காரகராக விளங்கும் கிரகமாவார். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தாய்மை உணர்வு அதிகம் மிக்கதாகவும், அளவற்ற பொறுமையும் கொண்டிருப்பார்கள். குடும்பத்தில் எவ்வளவு பெரிய குழப்பம் வந்தாலும் கோபப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவார்கள். தனது பொறுமையான குணத்தை வைத்தே தனக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். பிறரின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பளிப்பார்கள்.

இதையும் படியுங்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

Related Articles

Related image1
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Related image2
Tamil Astrology: வடக்கு நோக்கி நகரும் செவ்வாய் பகவான்.! ஜூலை 25 முதல் இந்த 5 ராசிகள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வருது.! இனி பண மழை தான்.!
35
எண் 6 (பிறந்த தேதிகள் - 6, 15, 24)
Image Credit : stockPhoto

எண் 6 (பிறந்த தேதிகள் - 6, 15, 24)

எண் 6-ல் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் அன்பு, அரவணைப்பு மற்றும் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தினருக்காகவும், தங்களை நேசிப்பவர்களுக்காகவும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை கூட தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். விருப்பங்களை விட்டுக் கொடுத்துப் போவதில் பூமாதேவியை போல முதன்மையாக நிற்பார்கள். பிறர் செய்யும் தவறுகளை கூட மன்னித்து அவர்களுக்கு நல்வழி காட்டும் அசாத்திய பொறுமை இவர்களுக்கு உண்டு. இலக்குகளை அடையும் வரை பொறுமையோடு காத்திருந்து வெற்றி பெறுவார்கள்.

இதையும் படியுங்கள் - இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தாமதமாகத் திருமணம் நடந்தாலும், கடவுள் போன்ற துணையைப் பெறுவார்களாம்.!

45
எண் 8 (பிறந்த தேதிகள் - 8, 17, 26)
Image Credit : stockPhoto

எண் 8 (பிறந்த தேதிகள் - 8, 17, 26)

எண் 8 சனி பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வருகிறது. இவர்களுக்கு சிறு வயதிலேயே முதிர்ச்சியும் அதீத சகிப்புத்தன்மையும் இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் மற்றும் தடைகள் வந்தாலும் சோர்ந்து போகாமல் அமைதியாக தன் கடமையை செய்து கொண்டே இருப்பார்கள். எந்த சலசலப்பும் இல்லாமல் காரியங்களை சாதிக்கும் பொறுமை இவர்களிடம் அதிகம் உண்டு. பெரிய நெருக்கடி வந்தாலும் பதற்றப்படாமல் அமைதியாக கையாள்வார்கள். குடும்பத்தை கட்டி காப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே.

இதையும் படியுங்கள் -  இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

55
தேவ கண நட்சத்திரங்கள்
Image Credit : Asianet News

தேவ கண நட்சத்திரங்கள்

ஜோதிடத்தில் தேவ கணம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு இயற்கையிலேயே மென்மையான குணமும், கோபமின்மையும், சாந்தமும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டும், யாரிடமும் சண்டை இல்லாமல் அமைதியாக வழியமைத்துக் கொள்வார்கள். தேவ கணத்தில் பிறந்தவர்கள் கோபத்தைக் குறைத்து சாந்தமாக பேசி காரியத்தை சாதிப்பார்கள். இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் தானாகவே தேடி வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Royal Life Astrology: ஹம்ச மகாபுருஷ யோகத்தால் கோடி நன்மைகளை அள்ளப்போகும் 4 ராசிகள் யாரு தெரியுமா?
Recommended image2
Tamil Astrology: வடக்கு நோக்கி நகரும் செவ்வாய் பகவான்.! ஜூலை 25 முதல் இந்த 5 ராசிகள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வருது.! இனி பண மழை தான்.!
Recommended image3
Tridhasanga Yoga : அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் திரிதசங்க யோகம்... இந்த 4 ராசிகளுக்கு செம ஜாக்பாட் வெயிட்டிங்...!
Related Stories
Recommended image1
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Tamil Astrology: வடக்கு நோக்கி நகரும் செவ்வாய் பகவான்.! ஜூலை 25 முதல் இந்த 5 ராசிகள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வருது.! இனி பண மழை தான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved