- Home
- Astrology
- Naga Panchami 2026: 4 ராசிகளை கோடீஸ்வரராக்கும் நாக பஞ்சமி: பணமழை, பதவி உயர்வு நிச்சயம்!
Naga Panchami 2026: 4 ராசிகளை கோடீஸ்வரராக்கும் நாக பஞ்சமி: பணமழை, பதவி உயர்வு நிச்சயம்!
Naga Panchami 2026: நாக பஞ்சமி விழா நாளான இன்று சந்திரன் பெயர்ச்சி அடைவதால் 4 ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. கோடீஸ்வரர்களாக மாறும் ராசிகள் என்னென்ன என விரிவாக பார்ப்போம்.

நாக பஞ்சமி 2026
நாக வழிபாட்டிற்குரிய புனித நாளான நாக பஞ்சமி விழா ஆகஸ்ட் 17 அதாவது இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய திங்கட்கிழமையில் நாக பஞ்சமி அமைவதுடன், மனோகாரகனான சந்திரன் ராசி மாறுவதும் இன்றைய நாளின் சிறப்பம்சமாகும்.
கன்னி ராசியில் இருந்து விடைபெறும் சந்திரன், சுக்கிரனின் ஆட்சி வீடான துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை நாட்களுக்கு சந்திரன் துலாம் ராசியில் பயணிப்பார். இந்த சந்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலுமே எதிரொலித்தாலும், குறிப்பாக 3 ராசிகளுக்கு திடீர் பண வரவையும், யோகமான பலன்களையும் அள்ளிக் கொடுக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
இதையும் படிங்க: Snake Dream: கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? நல்லதா, கெட்டதா?
கடகம் (Cancer)
சந்திரன் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீடான சுக ஸ்தானத்திற்கு நகர்கிறார். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். பெற்றோரின் ஆதரவும், அவர்களுடன் பொழுதைப் போக்கும் நல்வாய்ப்பும் அமையும். நீண்ட நாட்களாக பணி மாற்றம் தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு செய்தி வந்து சேரும். புதிதாக வீடு, மனை அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். அதிர்ஷ்டத்தின் துணையால் பாதியில் நின்ற காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கம் சீராகி நிதி நிலை மேம்படும்.
இதையும் படிங்க:Weekly Horoscope: ஆகஸ்ட் 16 - 22 வார ராசிபலன்.. யாருக்கு பணவரவு? யாருக்கு எச்சரிக்கை? முழு பலன்கள்!
துலாம் (Libra)
உங்கள் ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்திற்கே சந்திரன் வருகை தருகிறார். மன அழுத்தம் நீங்கி நேர்மறை எண்ணங்கள் கூடும். உங்கள் படைப்பாற்றலும் திறமையும் மிளிரும். திருமண வாழ்க்கையில் அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கவனமும் ஆர்வமும் கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணப் பிரச்சனைகள் விலகி, பொருளாதார ரீதியாக பெரிய நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 22 முதல் 'புதாதித்ய யோகம்'.. இந்த 4 ராசிகளின் தலைையெழுத்தே மாறப்போகுது! பண மழை!
தனுசு (Sagittarius)
உங்கள் ராசிக்கு 11-ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்கிறார். பங்குச்சந்தை மற்றும் பிற முதலீடுகளில் இருந்து எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு புதிய கதவுகள் திறக்கும். வருமானத்தைப் பெருக்க கூடுதல் வழிகள் பிறக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
மகரம் (Capricorn)
உங்கள் ராசிக்கு 10-ஆம் வீடான கர்ம/தொழில் ஸ்தானத்தில் சந்திரன் பிரவேசிக்கிறார். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சங்களை எட்டுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். நிலுவையில் இருந்த பழைய கடன்கள் மற்றும் நிதிச் சிக்கல்கள் தீரும். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கைக்கு வந்து சேரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

