- Home
- Astrology
- Mesham to Meenam Nov 18 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Mesham to Meenam Nov 18 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
November 18 Daily Horoscope for 12 zodiac signs: நவம்பர் 18, 2025 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Mesham to Meenam Nov 18 Daily Rasi Palan
மேஷம்:
இன்று இனிமையான நாளாக இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள அல்லது புதிய தொழில்களை தொடங்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். இலக்குகளை நோக்கி புதிய கவனத்துடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவசரப்பட்டு பேசுவதை தவிர்க்கவும்.
ரிஷபம்:
இன்று நிதானமும், பொறுமையும் தேவைப்படும் நாளாக இருக்கும். உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். பல வழிகளில் இருந்து பணம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
மிதுனம்:
இன்று உங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்துவீர்கள். தொழில் சம்பந்தமாக நடத்தும் பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சிறிய முதலீடுகளுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை கழிப்பீர்கள்.
கடகம்:
இன்று குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். பணியிடத்தில் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழில் ரீதியாக லாபம் சேரும். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி இணக்கம் ஏற்படும்.
சிம்மம்:
இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய வழிகளில் இருந்து பணம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
கன்னி:
இன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலையில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். கடன் கொடுப்பது வாங்குவதை தவிர்க்கவும். சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை.
துலாம்:
இன்று அதிர்ஷ்டம் சேரக்கூடிய நாளாக இருக்கும். கூட்டுத் தொழில்கள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை சீராக இருக்கும். திருமண உறவுகள் வலுப்பெறும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் நிலவும்.
விருச்சிகம்:
இன்று சவால்களை எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். தொழில் ரீதியாக லாபம் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் இலக்குகளை அடைய விடாமுயற்சி தேவை. எதிர்பாராத வழிகளில் பணம் வர வாய்ப்பு உள்ளது. கடன் குறையும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். பேச்சில் நிதானம் தேவை.
தனுசு:
ஆன்மீகம் மற்றும் உயர் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வெளிநாடு தொடர்பான சுப செய்திகள் கிடைக்கும். முதலீடுகளுக்கான திட்டங்களை உருவாக்கலாம். நிதி வளர்ச்சி திருப்தியாக இருக்கும். நண்பர்கள் மற்றும் சமூக வட்டத்தில் மதிப்புக்கூடும்.
மகரம்:
கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். இலக்குகளை அடைய உறுதியுடன் செயல்படுவீர்கள். உங்கள் செயல் திறன் பணியிடத்தில் பாராட்டப்படும். முதலீடுகளை கவனமாக மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். உறவுகள் பலப்படும்.
கும்பம்:
புதுமையான யோசனைகள் வெற்றிக்கு வழிவகுக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். இது தொழிலுக்கு பெரிய அளவில் உதவும். எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கலாம். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்:
இன்றைய தினம் உங்கள் உள் மனம் சொல்வதை கேட்டு செயல்படுங்கள். கவனச் சிதறல்கள் இருக்கக்கூடும் என்பதால் வேலையில் கூடுதல் கவனம் தேவை. நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். முதலீடுகள் லாபகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உணர்வுபூர்வமான பிணைப்பு அதிகமாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)