- Home
- Astrology
- Feb 12 Mesha Rasi Palan: மேஷ ராசி நேயர்களே, இன்று மனசை திடமா வச்சிக்கோங்க.! இந்த பிரச்சனைகள் வரலாம்.!
Feb 12 Mesha Rasi Palan: மேஷ ராசி நேயர்களே, இன்று மனசை திடமா வச்சிக்கோங்க.! இந்த பிரச்சனைகள் வரலாம்.!
February 12, 2026 Mesha Rasi Palangal: பிப்ரவரி 12, 2026 மேஷ ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:
மேஷ ராசி நேயர்களே, இன்று உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் சாதகமான நிலையில் இருக்கிறார். சனி பகவான் எட்டாம் இடத்தில் மறைவதால் சற்று கவனம் தேவை. குரு மற்றும் சனியின் பார்வை ஓரளவு பலன்களையேத் தரும்.
இன்று மன திடத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் பணிகளில் சில தடைகள் ஏற்படலாம். எனவே முக்கிய முடிவுகளை எடுப்பதை இன்று தவிர்க்கவும். நேர்மறையான சிந்தனையுடன் அனைத்து விஷயங்களையும் அணுகவும்.
நிதி நிலைமை:
இன்று பணம் சார்ந்த விஷயங்களில் ஏற்ற இறக்கம் காணப்படும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடலாம். வீட்டு விசேஷங்கள் அல்லது சுப காரியங்களுக்காக திட்டமிடப்படாத செலவுகள் ஏற்படக்கூடும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறவுகளில் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசவும். முக்கிய முடிவுகளை கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. இன்று பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். இன்றைய நாள் சாதகமாக அமைய சரியான திட்டமிடல் அவசியம்.
ஆரோக்கியம்:
செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயிறு வலியால் அசௌகரியமாக உணர்வீர்கள். முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை
பரிகாரம்:
தைரியத்தையும் வெற்றியையும் பெறுவதற்கு முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை என்பதால் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது தடைகளை நீக்க உதவும். ஏழைகளுக்கு தயிர் சாதம் தானம் அளிக்கவும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

