MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மேஷத்தில் புதன் சஞ்சாரம்! குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்! தலையெழுத்தே மாறப்போகுது!

மேஷத்தில் புதன் சஞ்சாரம்! குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்! தலையெழுத்தே மாறப்போகுது!

Mercury Transit 2026: மேஷத்தில் புதன் சஞ்சாரிப்பதால் 3 ராசிக்காரர்களின் தலையெழுத்தே மாறப்போகுது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 02 2026, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்
Image Credit : AI

குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்திரங்களின்படி கிரகங்கள் அவ்வப்போது ராசி மாறுவது மட்டுமின்றி, அடிக்கடி அஸ்தமனம் மற்றும் உதயம் அடைவதன் மூலமும் மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக போற்றப்படும் புதன் பகவான் இப்போது செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ள நெருப்பு ராசியான மேஷத்தில் சஞ்சரித்துள்ளார். புத்திக்கு அதிபதியான புதனும், வேகத்திற்கு அதிபதியான செவ்வாயும் இணையும் இந்த காலக்கட்டம் குறிப்பாக மே மாதம் 3 ராசிக்காரர்களின் தலையெழுத்தையே மாற்ற உள்ளது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசி நேயர்களே... உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் புதன் பகவான் அஸ்தமன நிலையில் சஞ்சரிக்கிறார். இந்த இடத்தில் புதன் அமர்வது உங்களின் தொழில் மற்றும் நிர்வாகத் திறனில் சில சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. பணியிடங்களின் உங்களின் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். 

கடின உழைப்புக்கு வெகுமதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது தொழில் புரிபவர்களுக்கு பொன்னான காலக்கட்டம் ஆகும். புதிய முதலீடுகள், புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உங்களின் வாக்கு வன்மை வெளிப்பட்டு சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதனின் அனுகூலத்தை அதிகரிக்கவும், அஸ்தமன தோஷம் நீங்கவும் பச்சை பயறு தானம் செய்வது கூடுதல் பலன்களை கொடுக்கும்.

Related Articles

Related image1
தலைவிதியே மாறப்போகுது.. மே மாதத்தில் சனி-புதன் அருளால் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Related image2
Astrology: சுனாபா யோகத்தால் கோடிகளை குவிக்க போகும் 3 ராசிகள்.! பணமும் பதவியும் இனி உங்களை தேடி வருமாம்.! சேர்த்து வச்சிக்கோங்க.!
34
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் புதன் பகவான் அஸ்தமன நிலையில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் தேடி வரப் போகிறது. புதிய தொழில் தொடங்குவதற்கு இது நல்ல காலக்கட்டம் ஆகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியிடங்களில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதிப் பிரச்சனைகள் சீராகி வருமான வழிகள் பிறக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். 

வெளிநாடு செல்ல காத்திருந்தவர்களுக்கு நற்செய்தி வரும். நீண்ட நாட்களாக உங்களைத் தொந்தரவு செய்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி, உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நிலுவையில் இருந்த பூர்வீக சொத்துகள் கைக்கு வரும். ஒட்டுமொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். புதன்கிழமைகளில் பசுவிற்குப் பச்சை புல் வழங்குவது உங்களின் அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்கும்.

44
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசியில் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் புதன் பகவான் அஸ்தமன நிலையில் சஞ்சரிப்பதால் மன சஞ்சலங்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியில் நின்ற வேலைகள் இனி சுமூகமாக நடக்கும். கலைத்துறை, எழுத்துதுறை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மதிப்பும் கிடைக்கும். வீடு வாங்குவது, வீட்டைப் புதுப்பிப்பது அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மன அழுத்தம் குறைந்து குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். மேன்மையான பலன்களைப் பெற புதன்கிழமைகளில் ஹயக்ரீவர் வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: உங்கள் குழந்தை இந்த தேதியில் பிறந்தவர்களா? பெற்றோர் தலையெழுத்தை மாற்றும் கோடீஸ்வர யோகம்!
Recommended image2
Weekly Rasipalan: மே 25 முதல் 31 வார ராசிபலன்! உங்களுக்கு குபேர யோகம் இருக்கா? 12 ராசிகளுக்கான பலன்கள்!
Recommended image3
காலை ஆபீஸ் செல்லும் முன் இந்த 5 மந்திரங்கள் சொல்றீங்களா? நாள் முழுக்க Positive Energy தேடி வரும்..
Related Stories
Recommended image1
தலைவிதியே மாறப்போகுது.. மே மாதத்தில் சனி-புதன் அருளால் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology: சுனாபா யோகத்தால் கோடிகளை குவிக்க போகும் 3 ராசிகள்.! பணமும் பதவியும் இனி உங்களை தேடி வருமாம்.! சேர்த்து வச்சிக்கோங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved