MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mercury Transit in Aries : ஏப்ரல் 30 முதல் 3 ராசிகளுக்கு கஷ்ட காலம்.! 15 நாட்களுக்கு ரொம்ப கவனம்.! தொழிலில் நஷ்டம் வரலாம்.! பரிகாரம் என்ன?

Mercury Transit in Aries : ஏப்ரல் 30 முதல் 3 ராசிகளுக்கு கஷ்ட காலம்.! 15 நாட்களுக்கு ரொம்ப கவனம்.! தொழிலில் நஷ்டம் வரலாம்.! பரிகாரம் என்ன?

Mercury Transit in Aries 2026 : ஏப்ரல் 30, 2026 அன்று, புதன் கிரகம் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் சூரியனுடன் புதன் இணைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. ஆனால் இது சில ராசிகளுக்கு எதிர்மறை பலன்களை வழங்க இருக்கிறது.

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 28 2026, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Mercury Transit in Aries 2026
Image Credit : AI Generated

Mercury Transit in Aries 2026

கிரகங்களின் நகர்வில் ஏற்படும் மாற்றங்கள் நம் வாழ்க்கையில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் இளவரசன் எனப்படும் புதன், ஏப்ரல் 30, 2026 அன்று காலை 6:55 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழைகிறார். அவர் மே 15, 2026 வரை அங்கேயே இருப்பார். ஏற்கனவே மேஷத்தில் இருக்கும் சூரியனுடன் புதன் இணைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜ யோகம் ஆனது பல ராசிகளுக்கு நன்மைகளை வழங்கினாலும், சில ராசிகளுக்கு அசுப பலன்களை வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

27
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி எதிர்மறையான பலன்களைக் கொடுக்கலாம். வரவிருக்கும் நாட்களில் உடல்நலப் பிரச்சனைகள் தீவிரமாகலாம். பழைய நோய்கள் மீண்டும் வர வாய்ப்புள்ளது. வேலையில் தடைகள், நஷ்டங்கள், தோல்விகள் ஏற்படலாம். மன அழுத்தம் அதிகரிப்பதால், சரியான முடிவெடுப்பது கடினமாகும். அவசரப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் பாதிப்பை ஏற்படுத்தலாம். பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உறவுகளில் விரிசல், வாக்குவாதங்கள், சட்டச் சிக்கல்கள் கூட ஏற்படலாம்.

Related Articles

Related image1
ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்த செல்வத்தின் அதிபதி.! ஐஸ்வர்யம் பெறும் 4 ராசிகள்.! சகல நன்மைகளும் கிடைக்குமாம்.!
Related image2
Nagamani : பாம்பின் தலையில் இருந்து விழுந்த கல்.! நாகமணியாக வழிபடும் மக்கள்.! உண்மையில் நாகமணி இருக்கிறதா? உண்மை என்ன?
37
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சவாலான நேரத்தைக் காட்டுகிறது. அதிகரிக்கும் மன அமைதியின்மையும், மன அழுத்தமும் உங்கள் வேலையைப் பாதிக்கலாம். தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் நீங்கள் பண நெருக்கடியை உணரலாம். எந்தவொரு முதலீடு அல்லது பணப் பரிவர்த்தனையிலும் காட்டும் சிறு கவனக்குறைவு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அவசர முடிவுகள் ஆபத்தை விளைவிக்கும். மேலும், வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருங்கள், சிறு கவனக்குறைவும் விபத்துக்கு வழிவகுக்கும்.

47
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியின் தாக்கம் சில கடினமான சூழல்களைக் கொண்டு வரலாம். நிதி விஷயங்களில் நிலையற்ற தன்மை இருக்கலாம், எனவே தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது முக்கியம். இந்தக் காலகட்டத்தில் உங்கள் பேச்சு மிக முக்கியப் பங்கு வகிக்கும், ஏனெனில் ஒரு சிறிய தவறு கூட உறவுகளில் விரிசலை உண்டாக்கும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இதுபோன்ற சமயங்களில், நிலைமை மோசமாகாமல் இருக்க பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்படுங்கள்.

57
வழிபாட்டு முறைகள்
Image Credit : Asianet News

வழிபாட்டு முறைகள்

புதன் பெயர்ச்சியால் ஏற்படும் அசுப விளைவுகளை குறைக்க கீழ்க்கண்ட சில வழிபாட்டு முறைகளை பின்பற்றலாம். புதன் கிரகத்தின் அதிபதியாக மகாவிஷ்ணு விளங்கி வருகிறார். எனவே புதன்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது மிகச் சிறந்த பலன்களைத் தரும். மதுரை மீனாட்சி அம்மனை மனதார நினைத்து வழிபடுவது கல்வியிலும், வியாபாரத்திலும் உள்ள தடைகளை நீக்கும். நவகிரக சன்னதியில் புதனுக்கு பச்சை பட்டு உடுத்தி, வெண் காந்தள் மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

67
பரிகாரங்கள்
Image Credit : AI Generated

பரிகாரங்கள்

புதன்கிழமை அன்று ஏழை எளியவர்களுக்கு பச்சைப்பயிறு தானம் செய்வது புதனின் தோஷத்தை பெருமளவு குறைக்க உதவும். புதன்கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது பச்சைப்புல் தருவது புண்ணியத்தைத் தரும். புதன்கிழமைகளில் பச்சை நிற காய்கறிகள் அல்லது கீரைகளை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது கிரக பலன்களை மேம்படுத்தும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது, நோட்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது புதன் பகவானின் தீய விளைவுகளை குறைக்கும் "கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத: ப்ரசோதயாத்" என்ற காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபிப்பது நன்மை தரும்.

77
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரிஷபம் முதல் துலாம் வரை: பிறப்பிலேயே ராஜயோகம் கொண்ட ராசிகள் இவைதான்! உங்கள் ராசி இதில் இருக்கா?
Recommended image2
Nagamani : பாம்பின் தலையில் இருந்து விழுந்த கல்.! நாகமணியாக வழிபடும் மக்கள்.! உண்மையில் நாகமணி இருக்கிறதா? உண்மை என்ன?
Recommended image3
Vastu Tips: மக்களே, பெட்ரூம்ல இந்த 3 பொருட்களை மறந்தும் வெக்காதீங்க!
Related Stories
Recommended image1
ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்த செல்வத்தின் அதிபதி.! ஐஸ்வர்யம் பெறும் 4 ராசிகள்.! சகல நன்மைகளும் கிடைக்குமாம்.!
Recommended image2
Nagamani : பாம்பின் தலையில் இருந்து விழுந்த கல்.! நாகமணியாக வழிபடும் மக்கள்.! உண்மையில் நாகமணி இருக்கிறதா? உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved