MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • புதன் பெயர்ச்சி அலர்ட்: 3 ராசிகளுக்கு பண இழப்பு, குழப்பம்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

புதன் பெயர்ச்சி அலர்ட்: 3 ராசிகளுக்கு பண இழப்பு, குழப்பம்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

Mercury Transit 2026: சிம்ம ராசி புதன் பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு பண இழப்பும் குழப்பமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள் மற்றும் எளிய பரிகாரங்கள் குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 20 2026, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புதன் பெயர்ச்சி 2026
Image Credit : AI

புதன் பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தில் 'கிரகங்களின் இளவரசன்' என்று போற்றப்படும் புதன் பகவான், ஒருவரின் புத்தி கூர்மை, தகவல் தொடர்பு திறன், பேச்சுவார்த்தை மற்றும் வியாபாரத்திற்கு காரக வகிப்பவர் ஆவார். அதனால் புதனின் நகர்வுகள் ஜோதிடத்தில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது கடக ராசியில் பயணிக்கும் புதன் பகவான், ஆகஸ்ட் 22 ஆம் தேதி சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளார். இந்த பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலுமே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சி காலத்தில் சற்று எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இதையும் படிங்க: செவ்வாய் - ராகு சேர்க்கை: அங்காரக யோகத்தால் அடிமேல் அடி வாங்கப்போகும் 4 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷம்
Image Credit : ChatGPT

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சி சில சவால்களையும், தடைகளையும் கொண்டுவரக்கூடும். தேவையற்ற செலவுகள் உயரும் என்பதால் நிதி நிர்வாகத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் அல்லது வேலை பளு அதிகரிக்கலாம்.

வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கூடுதல் கவனம் செலுத்தவும். காதல் உறவில் உள்ளவர்களுக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையலாம். எதிரிகளின் தொல்லை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை அவசியம். காரியத் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் அல்லது விஷ்ணு கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.

புதன்கிழமைகளில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது பச்சைப்பயறு தானமாக வழங்குவது நன்மையளிக்கும்.

இதையும் படிங்க:செவ்வாய்க்கிழமை ராசிபலன்: அம்மனின் பரிபூரண அருள் பெறப்போகும் ராசிகள் எவை? விரிவான பலன்கள்!

Related Articles

Related image1
Horoscope: 5 ராசிகளுக்கு நல்ல நேரம் தொடக்கம்.! தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் 4 ராசிகள்.!
Related image2
Neecha Bhanga Raj Yoga : உச்சத்தில் குரு... நீசபங்க ராஜயோகத்தால் அல்டிமேட் பலன்களை அனுபவிக்கப்போகும் 5 ராசிகள்..!
34
ரிஷபம்
Image Credit : ChatGPT

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த காலகட்டம் கலவையான பலன்களைத் தந்தாலும், சில விஷயங்களில் கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த லாபத்தில் சரிவோ அல்லது தற்காலிக நிதி நெருக்கடியோ ஏற்படலாம். எனவே, புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் மருத்துவச் செலவுகள் திடீரென அதிகரிக்கக்கூடும்.

எந்தவொரு முக்கியமான முடிவை எடுக்கும் முன்பும் பலமுறை யோசித்து செயல்படுவது அவசியம். தம்பதியருக்குள் வீண் விவாதங்களைத் தவிர்த்து, பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி, தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.

ஏழை மாணவர்களின் கல்விச் செலவிற்கு உங்களால் முடிந்த உதவிகளையோ அல்லது புத்தகங்கள், பேனா போன்ற கல்வி உபகரணங்களையோ தானமாக வழங்கலாம்.

44
விருச்சிகம்
Image Credit : ChatGPT

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சி சில ஏற்ற இறக்கங்களை அளிப்பதாக இருக்கும். வீட்டின் நிம்மதியைக் குலைக்கும் வகையில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரலாம். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளதால் வார்த்தைகளில் நிதானம் தேவை.

திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப்போவது அல்லது தோல்வியில் முடிவது மன உளைச்சலையும், அழுத்தத்தையும் தரக்கூடும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் பட்ஜெட் போட்டுச் செலவு செய்யுங்கள். உடல்நலத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும் என்பதால் சரியான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமை மாலை நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி, எலுமிச்சை பழமாலை சாற்றி வழிபட வேண்டும்.

புதன்கிழமைகளில் திருநங்கைகளுக்கு உங்களால் முடிந்த நிதி உதவி அல்லது பச்சை நிற ஆடை தானமாக வழங்கி அவர்களின் ஆசியைப் பெறுவது புதன் தோஷத்தை முழுமையாக விலக்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajayoga: சூறாவளியாய் சுழன்றடிக்கப்போகும் ராஜயோகம்..! இந்த 3 ராசிகளுக்கு இனி பணத்துக்கு பஞ்சமே இல்லை
Recommended image2
Numerology Forecast: உங்கள் பிறந்த தேதி சொல்லும் எதிர்காலம்.! ஆவணியில் வெற்றி மாலை சூடப்போகும் நபர் யார்?
Recommended image3
Kendra Yoga : கேந்திர யோகத்தால் அடிக்கப்போகுது ஜாக்பாட்... செப்டம்பரில் இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்குது!
Related Stories
Recommended image1
Horoscope: 5 ராசிகளுக்கு நல்ல நேரம் தொடக்கம்.! தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் 4 ராசிகள்.!
Recommended image2
Neecha Bhanga Raj Yoga : உச்சத்தில் குரு... நீசபங்க ராஜயோகத்தால் அல்டிமேட் பலன்களை அனுபவிக்கப்போகும் 5 ராசிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved