MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • செவ்வாய் - ராகு சேர்க்கை: அங்காரக யோகத்தால் அடிமேல் அடி வாங்கப்போகும் 4 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

செவ்வாய் - ராகு சேர்க்கை: அங்காரக யோகத்தால் அடிமேல் அடி வாங்கப்போகும் 4 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

Angarak Yoga 2026: செவ்வாய் - ராகு சேர்க்கையால் உருவாகும் அங்காரக யோகத்தால் 4 ராசிகளுக்கு சோதனை மேல் சோதனை வரப்போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என்பதையும் தப்பிக்க எளிய பரிகாரங்களையும் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 18 2026, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம்
Image Credit : AI

செவ்வாய் - ராகு சேர்க்கையால் அங்காரக யோகம்

ஜோதிட சாஸ்திரப்படி, நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவது வழக்கமான ஒன்று. இத்தகைய கிரகப் பெயர்ச்சிகளின் போது உருவாகும் சுப மற்றும் அசுப யோகங்களின் தாக்கம் 12 ராசிகளிலுமே எதிரொலிக்கும்.

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாகவும், தைரியம், வீரம், கோபம் மற்றும் ஆற்றலுக்கு அதிபதியாகவும் விளங்கக்கூடிய செவ்வாய் பகவான், சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். அத்துடன் குறிப்பிட்ட இடைவெளியில் நட்சத்திரப் பெயர்ச்சியையும் மேற்கொள்வார்.

சமீபத்தில் (ஆகஸ்ட் 12) செவ்வாய் பகவான் ராகுவின் ஆதிக்கம் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார்.

அங்காரக யோகம் என்றால் என்ன?

செவ்வாய் - ராகுவின் இந்த இணைப்பு ஜோதிடத்தில் அங்காரக யோகம் என்ற அசுப யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால் மன உளைச்சல், திடீர் உடல்நலக் குறைவு மற்றும் தொழில் ரீதியான தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

செவ்வாய் பகவான் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணிக்கவுள்ளதால், இந்த அசுப யோகத்தின் தாக்கம் அதுவரை நீடிக்கும். குறிப்பாக, கீழ்க்கண்ட 3 ராசியினரும் இக்காலகட்டத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: செவ்வாய்க்கிழமை ராசிபலன்: அம்மனின் பரிபூரண அருள் பெறப்போகும் ராசிகள் எவை? விரிவான பலன்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம்
Image Credit : Pixabay

1. மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் உடல்நலம் சார்ந்த கோளாறுகள் வரக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்து, மன அழுத்தம் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத சவால்கள் வரலாம். நிதி தொடர்பான விவகாரங்களில் அவசரப்பட்டு முடிவு எடுப்பதைத் தவிர்த்து, பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் துவரம்பருப்பு தானம் செய்வது உடல் ஆரோக்கியத்தையும் நிதி நிலைமையையும் சீராக்கும்.

இதையும் படிங்க: Naga Panchami 2026: 4 ராசிகளை கோடீஸ்வரராக்கும் நாக பஞ்சமி: பணமழை, பதவி உயர்வு நிச்சயம்!

Related Articles

Related image1
Best match for Aquarius: கும்ப ராசிக்கு யார் Perfect Match? இந்த 3 ராசிகளுடன் சேர்ந்தா செம கெமிஸ்ட்ரி
Related image2
Avani Rasipalan: ஆவணி வந்தாச்சு… இனி ஆட்டமே வேற..! 12 ராசிகளின் வாழ்க்கையில் நடக்கப்போகும் திருப்பம்
35
2. மிதுனம்
Image Credit : Pixabay

2. மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் தேவையில்லாத அலைச்சலும் செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சிறிய விஷயங்களுக்காக மனக்கசப்புகள் தோன்றலாம். வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை. சட்ட ரீதியான அல்லது கடன் தொடர்பான விஷயங்களில் அவசரப்பட்டு எந்த வாக்குறுதியும் அளிக்க வேண்டாம்.

பரிகாரம்: ராகுவின் தாக்கத்தைக் குறைக்க அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் நெய் தீபமேற்றி வழிபடலாம்.

இதையும் படிங்க: Snake Dream: கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? நல்லதா, கெட்டதா?

45
3. கன்னி
Image Credit : Pixabay

3. கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகமும் நட்பும் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கலாம். தினசரி செயல்பாடுகளில் கவனம் தேவை. குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால், எந்தவொரு பிரச்சனையையும் நிதானமாகப் பேசித் தீர்ப்பது அமைதியைத் தரும்.

பரிகாரம்: ஏழை எளியவர்களுக்கு அல்லது துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உணவு தானம் வழங்கிட சுப யோகம் உண்டாகும்.

55
4. மகரம்
Image Credit : Pixabay

4. மகரம்

மகர ராசியினருக்கு தொழிலில் மந்தமான சூழல் நிலவக்கூடும். பணியிடத்தில் தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் மற்றும் தொழில் சார்ந்த பெரிய முடிவுகளைத் தள்ளிப்போடுவது சிறந்தது. மேலதிகாரிகளுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை தோறும் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வழங்குவது காரியத் தடைகளை அகற்றும்.

பொறுப்பு துறப்பு

இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை மட்டுமே. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பொறுத்து மாறுபடலாம். இதில் உள்ள கருத்துகளுக்கும் ஏசியாநெட் தமிழ் இணையதளத்துக்கும் தொடர்பில்லை. வாசகர்களின் ஜோதிட நம்பிக்கைகளுக்காகவே இக்கருத்து பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: திடீரென கோடீஸ்வரர்கள் ஆகும் 4 நட்சத்திரங்கள்.! ராகுவால் கிடைக்கப்போகும் ராஜவாழ்க்கை.!
Recommended image2
Shukla Yoga : சுக்ல யோகம் + கஜகேசரி யோகம்... அனுமன் அருளால் 5 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்..!
Recommended image3
செவ்வாய்க்கிழமை ராசிபலன்: அம்மனின் பரிபூரண அருள் பெறப்போகும் ராசிகள் எவை? விரிவான பலன்கள்!
Related Stories
Recommended image1
Best match for Aquarius: கும்ப ராசிக்கு யார் Perfect Match? இந்த 3 ராசிகளுடன் சேர்ந்தா செம கெமிஸ்ட்ரி
Recommended image2
Avani Rasipalan: ஆவணி வந்தாச்சு… இனி ஆட்டமே வேற..! 12 ராசிகளின் வாழ்க்கையில் நடக்கப்போகும் திருப்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved