புதன் வக்ர பெயர்ச்சி 2025 பலன் : ஆகஸ்ட் 11 வரை இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!
Mercury Retrograde July 2025 Palan in Tamil : கடக ராசியில் வக்ரம் அடைந்த புதன் பகவானால் ஆகஸ்ட் மாதம் வரையில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதன் வக்ர பெயர்ச்சி 2025 பலன்
Mercury Retrograde July 2025 Palan in Tamil : ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் வக்ரம் பெறுவது என்பது, நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது அந்தக் கிரகம் தனது வழக்கமான பாதையில் முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கிச் செல்வது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைக் குறிக்கிறது. உண்மையில் எந்த கிரகமும் பின்னோக்கிச் செல்வதில்லை. அது ஒரு மாய தோற்றமே தவிர வக்ரம் கிடையாது.
புதன் வக்ர பெயர்ச்சி 2025 பலன் : ஆகஸ்ட் 11 வரை இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
பின்னோக்கி நகரும் நிகழ்விற்கு வக்ரம் என்று பெயர். அந்த வகையில் இந்த மாதம் கடந்த 18ஆம் தேதி புதன் வக்ரம் பெயர்ச்சி அடைந்துள்ளார். கடந்த ஜூலை 18ஆம் தேதி புதன் காலை 9.45 மணிக்கு புதன் கிரகம் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் 24 நாட்கள் வக்ர கதியில் இருக்கும். அதன் பின்னர் வக்ர நிவர்த்தி அடைவார். அப்படி கடக ராசியில் வக்ரம் அடைந்த புதன் சில ராசிகளுக்கு நேர்மறையான பலன்களைத் தரும். புதனின் வக்ரம் எந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதன் கிரகத்தின் பொதுவான குணங்கள்
பொதுவாக புதன் கிரகம் கல்வி, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், அறிவு, தகவல் தொடர்பு, பேச்சு, நரம்பு மண்டலம், வியாபாரம் ஆகியவற்றிற்கு காரணியாக கருதப்படுகிறது. புதனின் வக்ர கதியில் அதிர்ஷ்ட பலனை அனுபவிக்கும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
மேஷம் ராசிக்கான புதன் வக்ர பெயர்ச்சி 2025 பலன்:
புதன் வக்ர பெயர்ச்சி அடைந்த நிலையில் மேஷ ராசிக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகள் வலுப்படும். வருமானத்திற்கான புதிய வழிகள் தென்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம் ராசிக்கான புதன் வக்ர பெயர்ச்சி பலன்:
புதன் வக்ரம் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில், உங்கள் பொருள் வசதிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். நிலம், சொத்து மற்றும் வாகனங்களை வாங்கும் வலுவான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வேலையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிக ராசிக்கான புதன் வக்ர பெயர்ச்சி பலன்:
புதனின் வக்ர பெயர்ச்சியானது விருச்சிக ராசிகளுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். அலுவலகத்தில் வேலையில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
மகரம் ராசிக்கான புதன் வக்ர பெயர்ச்சி 2025 பலன்:
புதன் வக்ர காலத்தில் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில், உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள் நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். பேச்சு இனிமையாக இருக்கும். உங்கள் துணையிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம் ராசிக்கான புதன் வக்ர பெயர்ச்சி பலன்:
மீன ராசிக்காரர்களுக்கு புதன் வக்ரம் ஏராளமான நன்மைகளை தரும். இந்த காலகட்டத்தில், அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். அதிர்ஷ்டவசமாக, சில வேலைகளும் முடிவடையும். நீங்கள் மதச் செயல்களில் ஈடுபடுவீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடைய வாய்ப்புள்ளது.