- Home
- Astrology
- Meena Rasi Palan Nov 29: மீன ராசி நேயர்களே, சந்திரனின் சாதகமான நிலையால் இன்று அதிர்ஷ்டம் கொட்டும்.!
Meena Rasi Palan Nov 29: மீன ராசி நேயர்களே, சந்திரனின் சாதகமான நிலையால் இன்று அதிர்ஷ்டம் கொட்டும்.!
Nov 29 Meena Rasi Palan: நவம்பர் 29, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 29, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, சந்திர பகவானின் சாதகமான நிலை காரணமாக பணியிடத்தில் உங்கள் உழைப்பும், ஈடுபாடும் அதிகமாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உங்கள் பேச்சுத் திறமையால் சமூகத்தில் மதிப்புக்கூடும். தொழில் ரீதியான சந்திப்புகள் சாதகமாக இருக்கும். சிறிய அலைச்சல்கள் அல்லது சோர்வு ஏற்படலாம்.
நிதி நிலைமை:
குரு பகவானின் நிலை காரணமாக பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பார்த்த நிதி உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விரய ஸ்தானத்தில் கிரகங்கள் இருப்பதால் தவிர்க்க முடியாத அல்லது திட்டமிடப்படாத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே முதலீடுகளில் நிதானம் தேவை.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்களுடன் இன்றைய தினம் இணக்கமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். திருமணமானவர்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவது உறவை வலுப்படுத்தும். தேவையற்ற வாக்குவாதங்கள் சண்டைகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்:
இன்றைய தினம் திருநள்ளாறு சனீஸ்வர பகவானை வழிபடுவது நல்லது அல்லது அருகில் உள்ள சிவன் ஆலயத்தில் இருக்கும் சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். காகங்களுக்கு உணவளிப்பது, இயலாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது சனி பகவானின் பாதிப்பை குறைக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

